பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து!

பராமரிப்பு பணி காரணமாக நாளை சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Mukesh M | Last Updated : Jul 20, 2019, 01:19 PM IST
பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து! title=

பராமரிப்பு பணி காரணமாக நாளை சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது., "நாளை காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. 

இந்த அறிவிப்பின் படி சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தில் 36 மின்சார ரயில் சேவை அன்றைய தினம் ரத்து செய்யப்படுகிறது.  மதியம் 2 மணி முதல் சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும். 

இதேபோல், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்திலும் காலை 10.30 மணி முதல் மதியம் 3.10 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம் வழித்தடத்திலும் காலை 11 மணி முதல் மதியம் 1.50 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படும்.

பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் ரயில் சேவை தொடங்கும். தொடங்கும் நேரத்தில் கூடுதலாக 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்" என தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

Trending News