தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவி வந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகதி தற்போது வலுவிழந்து உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்தர் கூறுகையில், நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடற்கரை பகுதிகளில் நிலவி வந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகத்தின் உள் பகுதிகளில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது.அதிகமாக சோழவரம், மாதவரத்தில் தலா 12 செ.மீ.,வானூர், ரெட்ஹில்சில் தலா 11 செ. மீ.,பொன்னேரியில் 10 செ.மீ.,நுங்கம்பாக்கம், மரக்காணம்,திண்டிவனம், மீனம்பாக்கம், பண்ரூட்டியில் தலா 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அடுத்து 24 மணி நேரத்தில், வட மாவட்டங்களில் பரவலாகவும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், புதுச்சேரி, காஞ்சிபுரம்,தி.மலை, நாமக்கல், சேலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ஈரோடு, கரூர், நீலகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு, சில முறை மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் கிடையாது.
The North interior parts are Viluppuram, Puducherry, Kanchipuram, Trivandrum, Namakkal, Vellore, Salem, Dharmapuri, Krishnagiri, Erode, Karur, Neelagiri. Few spells of moderate rainfall with gaps expected in Chennai. No specific alert for fisherman till now: S Balachandran pic.twitter.com/2bLRpGohuz
— ANI (@ANI) November 22, 2018
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது அக்.,1 முதல் தற்போது வரை 26 செ.மீ., பதிவாகியுள்ளது. இயல்பு அளவு 32 சதவீதம். இதனால், 17 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.சென்னையில் இதுவரை பெய்த மழை அளவு 31 சதவீதம். இயல்பான அளவு 66 சதவீதம். 45 சதவீதம் குறைவான மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.