ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரயில்வே பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பாலம் பழமையான பாலமாக உள்ளதால் பாம்பன் கடலில் புதிதாக ரயில் பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அதற்காக ரூ.250 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து பாம்பன் பகுதியில் கடந்த 2 மாதமாக காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு, தொடர்ந்து பெய்த மழை ஆகியவற்றால் பாம்பனில் புதிய ரயில் பாலத்திற்கான பணிகள் நடைபெறவில்லை. கடந்த 10 நாட்களுக்கு மேலாக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. பாம்பன் வடக்கு பகுதியில் ரயில் பாலத்தை ஒட்டியுள்ள பகுதியல் புதிய ரெயில் பாலத்திற்காக தூண்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்காக கடற்கரை பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் சமதளப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. புதிதாக கட்டப்பட்டு வரும் பாம்பன் ரயில் பாலம் அடுத்த இரண்டு ஆண்டுக்குள் கட்டுமான பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இப்பணி தொடங்கப்பட்டது.
Tamil Nadu: Construction work of the new Pamban rail bridge is underway in Ramanathapuram district. The work had started on 8th Nov, 2019 and is expected to be completed within the next 2 years. (27.01.2019) pic.twitter.com/GAvJgjFyx4
— ANI (@ANI) January 28, 2020
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.