4-ம் அலை வந்துவிட்டதா? உண்மை என்ன

தமிழக மக்கள் ஐஐடி யில் உள்ளவர்களை முன்மாதிரியாக கொண்டு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 24, 2022, 02:39 PM IST
  • IIT வளாகத்தில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு.
  • நான்காம் அலை வந்துவிட்டதா என்று அச்சம்.
  • மக்கள் பயப்பட வேண்டாம் என்று அமைச்சர் விளக்கம்.
4-ம் அலை வந்துவிட்டதா? உண்மை என்ன title=

சென்னை கிண்டியில் உள்ள IIT வளாகத்தில் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 55 பேருக்கு  கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் IIT வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.  ஆய்விற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தற்போது கொரொனா பாதிப்பு உலக அளவில் அச்சுறுத்தி வருகிறது. அனைத்து அலைகளும் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது ஒரு வார காலத்தில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. 

corona

மேலும் படிக்க | அபராதத்திலிருந்துதான் விலக்கு முகக்கவசத்திலிருந்து இல்லை - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

இந்தியாவில் டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. சென்னை ஐஐடியில் இதுவரையும் 2015 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 60 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, 2.98% ஆக தொற்று எண்ணிக்கை உள்ளது.  தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக இறப்பு இல்லை, மேலும் 100 க்கும் கீழ் பாதிப்பு உள்ளது.  சென்னை ஐஐடி-யில் 19 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை கொரோனா அதிகரித்து வருகிறது. 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து மாணவர்கள் ஐஐடி வந்து பயின்று வருகிறார்கள்.14 விடுதிகளில் எந்த விடுதியில் மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் அனைவருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளது.

தொற்று ஏற்பட்ட 60 பேரில் கடந்த 4 நாட்களில் 40 பேருக்கு தொற்று இல்லாத நிலை உள்ளது. தற்போது 20 பேருக்கு லேசான பாதிப்பு உள்ளது.  மே 8 ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. கடந்த ஒரு வாரமாக நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நான்காவது அலை தொடங்கி விட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 4 ஆம் அலை இன்னும் தொடங்க வில்லை, மக்கள் அச்சப்பட தேவை இல்லை என்றார்.

நாளை காலை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தெரிவித்தார்.  ஐஐடியில் வளாகத்தில் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருக்கிறார்கள். ஐ ஐ டி வளாகத்தில் இருக்கும் அனைவரும் பரிசோதனை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை, அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். ஐஐடி யில் மாணவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அறிந்தி வரும் நிலையில் தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் உணவை pack செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் ஐஐடியில் உள்ளவர்களை முன்மாதிரியாக கொண்டு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனக்கேட்டு கொண்டார்.  கொரோனா வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றாமல் இருப்பவர்களிடம் 114 கோடி ரூபாய் தற்போது வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க | அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மதுபாட்டில்கள்: வைரலாகும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News