கடலூர் தொகுதி முன்னாள் காங். எம்பி கலியபெருமாள்(85) உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இச்செய்தியை உறுதி படுத்தும் வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி இரக்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது இரங்கள் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...
"கடலூர் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரும், கடலூர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவருமான திரு. பிபி கலியபெருமாள் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். நீண்ட காலமாக காங்கிரஸ் பேரியக்க வளர்ச்சிக்காக தம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர்,. ஒடுக்கதப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் நலனில் மிக்க அக்கறை கொண்டவராக செயல்பட்டவர் திரு. பிபி கலியபெருமாள் அவர்கள்.
கடலூர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், கடலூர் மாவட்ட முன்னாள் தலைவருமான திரு. PP கலியபெருமாள் அவர்கள் மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
அவர்களது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்: @KS_Alagiri pic.twitter.com/o49pgu6Qt3— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) March 22, 2019
அவரது மறைவு காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். திரு. பிபி கலியபெருமாள் அவர்களது மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் எனது சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும் வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.