7:30 PM 11/25/2020
அவசரகால உதவிக்காக ஆம்புலன்ஸ்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. ஏழு கடலோர மாவட்டங்களில் 465 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
TN government has asked ambulances to be on high alert for emergency cases; 465 ambulances ready to operate in seven coastal districts.#CycloneNivar
— AIADMK (@AIADMKOfficial) November 25, 2020
6:14 PM 11/25/2020
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது சுகாதாரத் துறையின் 426 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மற்றும் 780 ஆர்பிஎஸ்கே மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் உள்ளன என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
#நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது சுகாதாரத் துறையின் 426 நடமாடும் மருத்துவக் குழுக்கள் & 780 RBSK மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. வருவாய்த் துறையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள புயல் நிவாரண முகாம்களிலும் மருத்துவ குழுவினர் பணியில் இருப்பார்கள். @CMOTamilNadu pic.twitter.com/c3uRkCR4CX
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) November 25, 2020
4:51 PM 11/25/2020
நிவர் புயல் இன்று இரவு அல்லது நாளை கரையை கடக்க உள்ளதால் தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
4:05 PM 11/25/2020
இப்போதிலிருந்து சில மணிநேரங்களில் நிவர் புயல் பாண்டிச்சேரி மற்றும் வடக்கு தமிழ்நாடுவை நோக்கிச் செல்லும் 150 கி.மீ. வேகத்தில் புயல் வீசக்கூடும். சென்னையின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
#CycloneNivar #CycloneNivarUpdate less than 150 kms away from #Pondicherry heading towards North #TamilNadu landfall in a few hours from now. #StayHome #Chennai. Heavy spells of #Rains to continue. #COMK #chennairains pic.twitter.com/hHx6EPRrvU
— ChennaiRains (COMK) (@ChennaiRains) November 25, 2020
3:31 PM 11/25/2020
காரைக்கல் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று நள்ளிரவு மற்றும் நாளை அதிகாலை வேளையில் மிகக்கடுமையான சூறாவளி புயலாக 120-130 கிமீ வேகத்தில் மற்றும் 145 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புதுச்சேரியைச் சுற்றியுள்ள காரைக்கல் மற்றும் மாமல்லபுரம் இடையே 25 ஆம் தேதி நள்ளிரவு மற்றும் 2020 நவம்பர் 26 அதிகாலை நேரங்களில் மிகக் கடுமையான சூறாவளி புயலாக 120-130 கிமீ வேகத்தில் 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் - இந்திய வானிலை ஆய்வு மையம்.
— AIADMK (@AIADMKOfficial) November 25, 2020
3:00 PM 11/25/2020
மக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி பணிகளை துரிதமாகவும் கவனமாகவும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் களப்பணிகள் குறித்து நேரில்சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.
மக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி பணிகளை துரிதமாகவும் கவனமாகவும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். pic.twitter.com/8Ukzo5yL2b
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 25, 2020
2:20 PM 11/25/2020
இன்று இரவு நிவர் புயல் கரையைக் கடக்கக்கூடும் என்பதால், 27 ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்கள் ரத்து.
#CycloneNivar #bulletinSR Changes in the pattern of Train Services pic.twitter.com/jEsGjhWonv
— Southern Railway (@GMSRailway) November 25, 2020
#CycloneNivar Train Cancellations - Full refunds on cancellation of tickets and 6 months time limit for claiming refunds pic.twitter.com/8UokPCwxN3
— Southern Railway (@GMSRailway) November 25, 2020
2:17 PM 11/25/2020
எந்தவொரு அவசரநிலையையும் கையாள போதுமான அளவு 108 ஆம்புலன்ஸ்கள் (108 ambulance) உள்ளன, தேவைப்பட்டால், அண்டை மாவட்டங்களிலிருந்து அதிகமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொண்டு வரப்படும். மாவட்ட நிர்வாகமும் மாநில சுகாதாரத் துறையும் இணைந்து செயல்படும் ”என்று சுகாதார அமைச்சர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
2:05 PM 11/25/2020
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
— TN SDMA (@tnsdma) November 25, 2020
2:01 PM 11/25/2020
செம்பரப்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கொட்டும் மழையில் மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நேரில் ஆய்வு.
செம்பரம்பாக்கத்தை தொடர்ந்து புயல் நிவாரண முகாம்களையும் மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பார்வையிடுகிறார். #CycloneNivar #களத்தில்EPS
— AIADMK (@AIADMKOfficial) November 25, 2020
1:40 PM 11/25/2020
நிவர் புயல் எதிரொலி: சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை - மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அறிவிப்பு.
நிவர் புயல் எதிரொலி- சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை - மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அறிவிப்பு.
— AIADMK (@AIADMKOfficial) November 25, 2020
1:30 PM 11/25/2020
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதகு எண் 10 வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், கானு நகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான் பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அருகில் உள்ள நிவாரண மையங்களுக்க செல்ல அறிவுறுத்தல்.
நிவார் சூறாவளி, வானிலை முன்னறிவிப்பு: செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து இன்று நண்பகல் 1000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி ஏரியின் கரைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான பகுதிக்கு செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை (Chennai) , ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தாம்பரத்தில் உள்ள அடையார் ஆற்றின் கரையில் வசிக்கும் மக்களுக்கும் திருநீர்மலை, காவலூர், குன்றத்தூர் போன்ற பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மத்திய நீர் ஆணையம் (Central Water Commission) அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதகு எண் 10 வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், கானு நகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான் பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அருகில் உள்ள நிவாரண மையங்களுக்க செல்ல அறிவுறுத்தல். மேலும் கட்டுப்பாட்டு அறையை தொடர்புக்கொள்ள 044-25384530, 044-25384540 என்ற எண்ணை அழைக்கவும்.
*செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதகு எண் 10 வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.#Nivar #Chennai #sembarabakkam pic.twitter.com/1mhvh86tZf
— Leo Jude Ubagaramary Henry (@lalithjude76) November 25, 2020
இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் (Chembarambakkam Lake) நீரின் உயரம் 21.55 அடி, மொத்த கொள்ளளவு 2999 மில்லியன் கன அடி, நீர்வரத்து 4027 ஆக உள்ளது. இதனிடையே மழை காரணமாக இன்று நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது ஏரி இன்று நிரம்பிய உடன் அப்படியே தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது. ஏரியில் வினாடிக்கு 50000 கனஅடி நீரை வெளியேற்றும் திறன் உள்ளது. அச்சப்பட தேவையில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் மிக முக்கியமான ஏரி செம்பரம்பாக்கம் ஏரி, சுமார் 9 கிலோமீட்டர் நீளமும் மொத்தம் 24 அடி உயரமும் உடையது.
ALSO READ | நிவர் புயல்: சென்னையில் தயார் நிலையில் 77 நிவாரண மையங்கள், 2 சமூக சமையலறைகள்
புதன்கிழமை மாலை நிவார் சூறாவளி இது காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையக் கடக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி (Puducherry) கடற்கரை பகுதிகளில் 120-130 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
நிவார் சூறாவளி (Cyclone Nivar) பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படும் நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அதிகாரிகள், தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என உறுதி செய்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினார்.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிவார் என்ற கடுமையான சூறாவளி புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் 11 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
ALSO READ | நிவர் புயல்: ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியல் இங்கே சரி பார்க்கவும்!
அத்தியாவசிய சேவைகள் மட்டுமே தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக அரசு (TN Govt) இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. ஆறு மாவட்டங்களில் பேருந்து சேவைகள் மற்றும் சென்னையில் இருந்து ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் புறநகர் ரயில்கள் காலை 10 மணி வரை இயக்கப்பட்டன. விடுமுறை சேவை நேர அட்டவணையின்படி சென்னையில் மெட்ரோ சேவைகள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR