சமூக பிரச்னைகளுக்கு கமல் குரல் கொடுத்தாரா? தமிழிசை கேள்வி

கமலை பற்றி என்னுடைய கருத்து என்னவென்றால் ஒரு வருடத்திற்கு முன்பு வரை தமிழகத்தில் பல பிரச்னை அவருக்கு இருந்தது. அப்போது அதற்காக என்ன குரல்கொடுத்தீர்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை.

Last Updated : Jul 19, 2017, 01:10 PM IST
சமூக பிரச்னைகளுக்கு கமல் குரல் கொடுத்தாரா? தமிழிசை கேள்வி

பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் பேசியது:-

ரஜினி ஆரம்ப காலத்திலிருந்தே சில சமுக கருத்துக்களை சொல்லிக்கொண்டிருக்கின்றார். 1996-ம் ஆண்டு அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்காக களத்தில் இறங்கினார். நதிகள் இணைக்க வேண்டும் என்ற பணிக்காக அவர் பணம் கொடுத்து உதவினார். அப்போது ஒரு அங்கிகாரம் கிடைத்தது. இப்படி அரசியல் கருத்துக்களை சொல்லிக்கொண்டிருப்பவராக நடிகர் ரஜினிகாந்த இருந்தார்.

கமலை பற்றி என்னுடைய கருத்து என்னவென்றால் ஒரு வருடத்திற்கு முன்பு வரை தமிழகத்தில் பல பிரச்னை அவருக்கு இருந்தது. அப்போது அதற்காக என்ன குரல்கொடுத்தீர்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை.

கமல் சொல்வது சரிதான் என அவர் பின்னால் செல்லும் சில அரசியல் கட்சிகளை எதிர்த்து அவர் கருத்து கூறினால் அவர்கள் ஏற்பார்களா என்றார் தமிழிசை செளந்தராஜன்.

More Stories

Trending News