ஃபெஞ்சல் புயல் எதிரொலி! நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

புயல் காரணமாக நேற்றும் இன்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து விடாமல் கனமழை பெய்து வருவதால் நாளையும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Written by - RK Spark | Last Updated : Dec 1, 2024, 08:02 PM IST
    2 நாட்களாக கொட்டி தீர்க்கும் கனமழை.
    பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
    இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
ஃபெஞ்சல் புயல் எதிரொலி! நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! title=

தென்மேற்கு வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக மாறியது. இதனால் கடந்த 2 தினங்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை புயல் வலுப்பெற்ற நிலையில், இன்று காலை வலுவிழந்து நகர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக நேற்றும் இன்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து விடாமல் கனமழை பெய்து வருவதால் நாளை (02.12.2024) திங்கட்கிழமையும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வெள்ளத்தில் மிதக்கும் சென்னை!! கடல் போல் தேங்கிய மழைநீர்..

எந்த எந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?

கனமழை எதிரொலியாக நாளை( 02.12.2024) புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

கனமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (02.12.2024) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலின் காரணமாக 30.11.2024 மற்றும் 01.12.2024 ஆகிய இரண்டு நாட்கள் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக நாளை (02.12.2024) வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் நாளை நடைபெற இருந்த வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக நவம்பர்-டிசம்பர் 2024 பருவ தேர்வுகள் கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் இரண்டு நாட்கள் பெய்த கனமழை  காரணமாக பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பு நலன் கருதி நாளை 2.12.2024 திங்கட்கிழமை இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.யு. சந்திரகலா  உத்தரவிட்டுள்ளார்.

கனமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (02.12.2024) திருவண்ணாமலை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

துணை முதல்வர் நலத்திட்ட உதவி

கடலூரில் ஃபெஞ்சல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தில் துணை முதல்வர் பார்வையிட்டு அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரை கடந்தும் அதன் தாக்கம் குறையாமல் இன்று பிற்பகல் வரை கடலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் குடியிருப்புகளுக்குள்ளே சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். 

இதனை அடுத்து மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் புயல் பாதுகாப்பு மையங்கள் தற்காலிக முகாம்கள் என தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட புருஷோத்தமன் நகர் பகுதியை சார்ந்த 72 பேர் தங்க வைக்கப்பட்டுள்ள கேஎன்சி மகளிர் கல்லூரியில் நேரில் ஆய்வு செய்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேட்டி, கண்காணிப்பு அதிகாரி எஸ்ஏ ராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க | சுற்றிலும் மழை நீர்... தவிக்கும் சுனாமி குடியிருப்புவாசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News