சென்னை: நிவர் புயல் புதன்கிழமை பிற்பகலுக்குள் அதி தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையில், புதுச்சேரிக்கு அருகில் இன்று இரவு அல்லது நாளை கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் நிவர் புயல் கரையை கடக்க உள்ளதால் தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi K. Palaniswami) அறிவித்துள்ளார்.
நிவர் புயலை (Cyclone Nivar) எதிர்க்கொள்ளும் விதமாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில், நாளை மேலும் 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ALSO READ | நிவர் புயல் எதிரொலி: நவ., 28 வரை 3 நாட்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு..!
நிவர் புயல் எதிரொலி- சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை - மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அறிவிப்பு.
— AIADMK (@AIADMKOfficial) November 25, 2020
ALSO READ | RED ALERT அடையாறு மக்களுக்கு எச்சரிக்கை உதவி எண்கள் 044-25384530, 044-25384540
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிவார் என்ற கடுமையான சூறாவளி புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் 11 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகள் மட்டுமே தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக அரசு (TN Govt) இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. ஆறு மாவட்டங்களில் பேருந்து சேவைகள் மற்றும் சென்னையில் இருந்து ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் புறநகர் ரயில்கள் காலை 10 மணி வரை இயக்கப்பட்டன. விடுமுறை சேவை நேர அட்டவணையின்படி சென்னையில் மெட்ரோ சேவைகள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும்.
ALSO READ | ‘நிவர்‘ இன்று மதியம் அதி தீவிர புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்..!
மேலும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து இன்று நண்பகல் 1000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி ஏரியின் கரைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான பகுதிக்கு செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை (Chennai) , ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தாம்பரத்தில் உள்ள அடையார் ஆற்றின் கரையில் வசிக்கும் மக்களுக்கும் திருநீர்மலை, காவலூர், குன்றத்தூர் போன்ற பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மத்திய நீர் ஆணையம் (Central Water Commission) அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதகு எண் 10 வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், கானு நகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான் பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அருகில் உள்ள நிவாரண மையங்களுக்க செல்ல அறிவுறுத்தல். மேலும் கட்டுப்பாட்டு அறையை தொடர்புக்கொள்ள 044-25384530, 044-25384540 என்ற எண்ணை அழைக்கவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR