19 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிப்பு

வரும் 19 ஆம் தேதி காலை 11 மணி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மதிப்பெண் சான்றிதழ்களை 22 ஆம் முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 16, 2021, 04:21 PM IST
19 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிப்பு title=

சென்னை: வரும் 19 ஆம் தேதி காலை 11 மணி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மதிப்பெண் சான்றிதழ்களை 22 ஆம் தேதி காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைத்தளம் வழியாக அறிந்துக்கொள்ளலாம். அதேபோல் பள்ளியில் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு குறிஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

தேர்வு முடிவுகள் வெளியாகும் இணைத்தளம்: 
tnresults.nic.in
dge.tn.gov.in 
dge1.tn.nic.in 
dge2.tn.nic.in

அதேபோல 22 ஆம் தேதி காலை 11 மணி முதல் dge.tn.gov.in மற்றும் dge.tn.nic.in என்ற இணையத்தளங்களில்  தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீட்டு தங்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தேர்வு இயக்கம் சார்பில் தெரிவிகப்பட்டு உள்ளது.

ALSO READ |  +2 மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவு

12th exam results in Tamil Nadu

கடந்த மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று அச்சம் காரணமாக பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் , மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி எனவும் தமிழக அரசு அறிவித்தது.

இதனையடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் எப்படி கணக்கீடு செய்யப்படும் என பலரின் கேள்வியாக இருந்தது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் மதிப்பெண் வழங்குவது குறித்து தெளிவுப்படுத்தப்பட்டது. 

மதிப்பெண் கணக்கீடு முறை: 

- 10 வகுப்பு மதிப்பெண்ணில் 50%, 11 ஆம் வகுப்பு மதிப்பெண் 20% மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு 30% எடுத்துக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
- 11 ஆம் வகுப்பில் தேர்வை எழுதாத மாணவர்களுக்கும், தோல்வியுற்ற மாணவர்களுக்கும் அந்த தேர்வுகளில் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும். 
- 12 ஆம் வகுப்பு தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு 20, அக மதிப்பீடு 10 என 30% கணக்கிடப்படும்.

முன்னதாக ஜூலை 31 ஆம் தேதிக்குள் பிளஸ் 2 மதிப்பெண் குறித்து விவரங்கள் வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூலை 19 ஆம் தேதி காலை 11 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை (TN School) அறிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News