ICMR பரிந்துரையின் பேரிலேயே கபசுர குடிநீர் வழங்கபட்டது: TN Govt விளக்கம்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக பரிந்துரையின் பேரிலேயே கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் மக்களுக்கு தரப்படுகிறது என உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு விளக்கம்!!

Last Updated : Jun 23, 2020, 04:07 PM IST
    1. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக பரிந்துரையின் பேரிலேயே கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் மக்களுக்கு தரப்படுகிறது.
    2. ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தும் பரிந்துரை அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது.
ICMR பரிந்துரையின் பேரிலேயே கபசுர குடிநீர் வழங்கபட்டது: TN Govt விளக்கம்! title=

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக பரிந்துரையின் பேரிலேயே கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் மக்களுக்கு தரப்படுகிறது என உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு விளக்கம்!!

கொரோனாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை பரிசோதித்து அதன் முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள், தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. 

அப்போது, கொரோனா தொற்றுக்கு எந்த அடிப்படையில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் பரிந்துரைக்கப்படுகிறது? அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்கள் கண்டுபிடித்த மருந்தை இதுவரை ஆய்வு செய்யாதது ஏன்? கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயத்தை, எந்த பரிசோதனையின் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? கேள்வியை நிதிபதிகள் எழுப்பினர். இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர். 

READ | 'Made in India' திட்டத்தின் கீழ் PM CARES நிதியிலிருந்து 50,000 வென்டிலேட்டர்கள் தயாரிப்பு..!

இதையடுத்து, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக பரிந்துரையின் பேரிலேயே கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் மக்களுக்கு தரப்படுகிறது என்றும், ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தும் பரிந்துரை அடிப்படையிலேயே வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. சென்னை அரும்பாக்கத்தில் ரூ.12 கோடி செலவில் ஆராய்ச்சி மையம் அமைப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

Trending News