வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது கனிமொழி ட்வீட் செய்துள்ளார்!!
சென்னை: வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். உலக ஜனநாயக குறியீட்டில் இந்தியா ஒரே ஆண்டில் 10 இடங்கள் கீழிறங்கி உள்ளது. இந்தியா 10 இடங்கள் கீழிறங்கி இருப்பது ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதை உணர்த்தியுள்ளது என அவர் தெரிவித்தார்.
உலகளாவிய ஜனநாயக அட்டவணையில் இந்தியா 10 இடங்கள் சரிந்து 51 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான வெளியிடப்பட்ட ஜனநாயகக் குறியீட்டின் பட்டியலில் பொருளாதாரத்தை புலனாய்வு பிரிவு (ஈஐயு) இந்தியாவை "குறைபாடுள்ள ஜனநாயகம்" என்று பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் சிவில் சுதந்திரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த பட்டியலில், இந்தியாவின் மொத்த மதிப்பெண் 2018 இல் 7.23 ஆக இருந்தது. இது தற்போது 6.90 ஆக குறைந்துள்ளது.
உலக ஜனநாயக குறியீட்டில், இந்தியா ஒரே ஆண்டில் 10 இடங்கள் கீழிறங்கியிருப்பது, இந்தியாவில் உரிமைகள் எப்படி பறிக்கப்பட்டு வருகின்றன என்பதை உணர்த்துகிறது. ஒரு வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 23, 2020
இந்நிலையில் இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி..... "உலக ஜனநாயக குறியீட்டில், இந்தியா ஒரே ஆண்டில் 10 இடங்கள் கீழிறங்கியிருப்பது, இந்தியாவில் உரிமைகள் எப்படி பறிக்கப்பட்டு வருகின்றன என்பதை உணர்த்துகிறது. ஒரு வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது" என அவர் பதிவிட்டுள்ளார்.