விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் உள்ள செம்பொன் நெருஞ்சி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அரியநாச்சி அம்மன், கருப்பசாமி, அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு ஆன்லைன் வழியாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி 386 காளைகள் முன்பதிவு செய்யபட்டிருந்தது. மேலும் 200 க்கும் மேற்பட்ட காளை பிடி வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர். போட்டியை வருவாய் கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டியில் முதல் காளையாக கோயில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு 25 வீரர்கள் என காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை போட்டி நடைபெறுகிறது. களத்தில் சீறிப் பாய்ந்த காளைகளை, காளையர்கள் வீர தீரத்துடன் அடக்கினர்.
மேலும் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளை உரிமையாளர்களுக்கும் கட்டில், ஏர்கூலர், பீரோ, அண்டா, மின்விசிறி, ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. காயமடைந்த மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். மேலும் சுமார் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க | 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஆண்டு வாரியாக தேர்ச்சி விகிதம்
முன்னதாக, மே மாத தொடக்கத்தில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவிற்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கி வரும் இந்த அம்மனுக்கு, வருடம் தோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடக்கும். அதற்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், இந்த வருடமும் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியானது நடத்த வாடிவாசல் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 725 ஜல்லிக்கட்டு காளைகள் வரிசையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதனை 164 மாடுபிடி வீரர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அடக்கினர்.
மேலும் படிக்க | கோவையில் பொதுமக்களை ஈர்த்த பஞ்சாபி உணவுத் திருவிழா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ