பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து சசிகலா (Sasikala) விடுதலையாகியுள்ளார். சிறையில் இருந்து விடுதலை ஆவதற்கான உத்தரவு சிறை அதிகாரிகள் சசிகலாவிடம் வழங்கியுள்ளனர். பிப்ரவரி 3-ம் தேதி அல்லது அதற்கு பிறகு சசிகலா சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் சசிகலா (Sasikala). இவர் அண்மையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய அவருக்கு கொரோனா (Corona) பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கிவிட்டது என்று நேற்று செய்திகள் வெளியாகின. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு டாக்டர்கள் மாற்றியுள்ளனர்.
ALSO READ | சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தகவல்!!
சசிகலாவின் (AIADMK leader Sasikala) உடல்நிலை குறித்து விக்டோரியா அரசு (Victoria Hospital) மருத்துவமனை நேற்று மாலை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 66 வயதாகும் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தற்போது கொரோனா (Coronavirus) பாதிப்புகள் குறைந்துவிட்டன. கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. சுயநினைவுடன் நன்றாக பேசுகிறார். கொரோனா வழிகாட்டுதல்படி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே பெங்களூரு சிறை நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தபடி சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து சசிகலா (Sasikala) விடுதலையாகியுள்ளார். சிறையில் இருந்து விடுதலை ஆவதற்கான உத்தரவு சிறை அதிகாரிகள் சசிகலாவிடம் வழங்கியுள்ளனர்.
ஆனால் அவரது தற்போதைய நிலையில் அடுத்த சில நாட்கள் சசிகலா பெங்களூருவில் தான் இருக்கப்போகிறார். அவரது உடல்நிலை நன்றாக தேறிய பிறகே அவரை தமிழகத்திற்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இன்று விடுதலை செய்யப்பட்ட பிறகு நாளை சசிகலாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கை வந்தால், அவரை மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யவும் அந்த மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ALSO READ | சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR