பெங்களூரூ: ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவதை பெங்களூர் சிறைத் துறை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சசிகலா, போயஸ் கார்டனிலேயே வசித்துவந்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு (Sasikala) 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 கோடி அபராதத் தொகையும் விதிக்கப்பட்டிருந்தது. அபராதத் தொகை ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது.
சசிகலா கடந்த 2017-ஆம் ஆண்டு, பெங்களூர் (Bengaluru) பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பரோலில் சென்ற காலம் மற்றும் வேறு சில விதிமுறைகளின் அடிப்படையில் 4 ஆண்டுகால சிறை தண்டனை கணக்கில் கொண்டு, சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாவார் என சிறைத் துறை நிர்வாகம் முன்னதாக தெரிவித்திருந்தது.
Also Read | சசிகலாவின் உறவினர் இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
சசிகலாவின் வருகையால் தமிழக அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாகவும் பல்வேறு வதந்திகள் உலாவந்தன. அனைத்தையும் தலைகீழாக மாற்றும் விதமாக, 5 நாட்களுக்கு முன்னதாக சசிகலா ஆரோக்கிய குறைபாட்டால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தற்போது விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கொரோனா (Corona) தொற்று ஏற்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனாவின் தாக்கமும் மூச்சுத் திணறலும் குறைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சசிகலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரது விடுதலை தாமதமாகலாம் என கருதப்பட்டது. ஆனால் ஏற்கனவே அறிவித்தபடி, ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவர் என பெங்களூர் சிறைத் துறை நிர்வாகம் உறுதி செய்தது.
Also Read | மத்திய அரசிடம் 1464 கோடி ரூபாய் நிதி கோரும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
இதற்கான ஆவணங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் 27-ஆம் தேதி காலை 11 மணிக்கு சசிகலா சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனையிலேயே சிறைத் துறை அதிகாரிகள் சசிகலாவிடம் விடுதலைக்கான கையெழுத்தை பெற்றுக் கொள்வார்கள் என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சசிகலாவை விக்டோரியா மருத்துவமனையிலிருந்து வேறு தனியார் மருத்துவமனைக்கு மாற்றுமாறு அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் சிறை கைதிகள் போலீஸ் காவலில் வைத்து அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்றும் கூறிவிட்டது. தற்போது இருக்கும் மருத்துமனையிலேயே போதுமான வசதிகள் இருப்பதால் சசிகலாவை வேறு மருத்துவமனைக்கு மாற்றமுடியது என்றும் சிறைத்துறை தெரிவித்துவிட்டது.
சசிகலாவின் விடுதலைக்கு பின்னர் சசிகலா விரும்பும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதில் எந்த தடையும் இல்லை என்று சிறைத் துறை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Also Read | சசிகலாவின் உயிருக்கு ஆபத்து: திவாகரன் கிளப்பிய சந்தேகத்தால் பரபரப்பு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR