அம்மா உணவகத்தில் கருணாநிதி படம் அகற்றம்

மதுரை அம்மா உணவகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் முன்னாள் முதல்வர் கருணாநிதி படமும் வைக்கப்பட்ட பெயர் பலகை ஒரே நாளில் அகற்றம்

Written by - ZEE Bureau | Last Updated : Nov 21, 2021, 01:15 PM IST
அம்மா உணவகத்தில் கருணாநிதி படம் அகற்றம்

மதுரை மாநகராட்சியில் ஜெய்ஹிந்த்புரம் என்ற பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. அங்கு அம்மா உணவகம் பெயர் பலகை திடீரென நேற்று மாற்றப்பட்டு உள்ளது. 

இந்த பலகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா (Jayalalitha) மற்றும் கலைஞர் கருணாநிதி (Karunanithi) படங்கள் பொறிக்கப்பட்ட புதிய பெயர் பலகை வைக்கப்பட்டது. இந்த புதிய பலகையை பார்த்து அதிமுகவினர் அந்த பெயர் பலகையை உடனடியாக அகற்ற வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ |  அம்மா உணவகத்தில் தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது சட்டப்படி நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் உத்தரவு

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியபோது மதுரையில் செயல்படும் அம்மா உணவக (Amma unavagam) பெயர் பலகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படமும் இடம் பெற்றது குறித்து தங்களுக்கு தெரியாது என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவிய பிறகு எங்களுக்கு தெரிய வந்தது என்றும் தெரிவித்தனர். மேலும் இது போன்ற படத்தை வைக்க அரசு தரப்பில் எந்த ஒரு அறிவுறுத்தலும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.

No description available.

ஆனால் இதுகுறித்து திமுகவினரிடம் கேட்டபோது கட்சி தலைமையிடம் தெரிவித்துவிட்டு தான் இவ்வாறு புகைப்படம் வைத்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இது தொடர்பாக ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை எளியோருக்கு மலிவான விலையில் உணவினை வழங்கும் வகையில்  2013-ம் ஆண்டு சென்னையில் அம்மா உணவகத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் 700 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டது.  இதன் மூலம் நாள்தோறும் 12 லட்சத்துக்கு மேற்பட்டோர் பசியாறி பயனடைந்தனர் குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு இந்த திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. 

தற்போது அம்மா உணவக திட்டத்தினை ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர். மதுரையில் தற்போது 12 அம்மா உணவகம் உள்ளது. 

No description available.

இனிலையுஇல் தற்போது அம்மா உணவகத்தில் ஜெயலலிதா புகைப்படத்திற்கு அருகில் கலைஞரின் புகைப்படத்தை வைத்து திட்டத்தை திசைதிருப்புகிற வகையில் ஜெயலலிதாவின் முகத்தை அகற்ற முயற்சிப்பது வீண் முயற்சி. அய்யாவின் படத்தை வைப்பதில் அரசு எடுக்கின்ற முனைப்பை ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்குவதில் அளியுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News