மதுபோதையில் தகராறு.. தட்டிக்கேட்ட பெண் மற்றும் பிள்ளைகள் மீது கத்திக்குத்து

ஒரு பெண் தன்னை தட்டி கேட்பதை பொறுத்துக்கொள்ள முடியாத வாலிபர் ராஜ்குமார் தன்னுடைய சக நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து உருட்டுக்கட்டையாலும் கத்தியாலும் சராமரியாக தாக்கியுள்ளதாக தெரிகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 28, 2022, 11:57 AM IST
மதுபோதையில் தகராறு.. தட்டிக்கேட்ட பெண் மற்றும் பிள்ளைகள் மீது கத்திக்குத்து title=

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகுனிச்சி பகுதியில் வசிப்பவர் கோபி (42). இவரது மனைவி மீனாட்சி (38) ஆவார். இவர்களுக்கு ரிஷிகேஷ் சுரேஷ்குமார் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவரது வீட்டிற்கு எதிரில் வசிப்பவர் ஜெயபால் மகன் ராஜ்குமார் (22). ராஜ்குமார் எப்போதும் நண்பர்களுடன் குடிபோதையில் உல்லாசமாக இருப்பார். அதன்படி இன்று தன்னுடைய வீட்டின் மாடியில் இருந்து குடிபோதையின் உச்சத்தில் செங்கல்லை எடுத்து வீசியுள்ளார்.

மேலும் படிக்க | மாணவி தற்கொலை: போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது

ராஜ்குமார் வீசிய செங்கல் எதிர்பாராதவிதமாக வீட்டின் வாசலில் பெருக்கிக் கொண்டிருந்த மீனாட்சியின் மீது விழுந்துள்ளது. இதனால் கோபமைந்த மீனாட்சி ராஜ்குமாரை தட்டிக் கேட்டுள்ளார். ஒரு பெண் தன்னை தட்டி கேட்பதை பொறுத்துக்கொள்ள முடியாத வாலிபர் ராஜ்குமார் தன்னுடைய சக நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து உருட்டுக்கட்டையாலும் கத்தியாலும் சராமரியாக மீனாட்சி மற்றும் அவரது பிள்ளைகள் மீது தாக்கியுள்ளதாக தெரிகிறது.

BJP man stabbed after he resisted rowdyism by 3 youths in Dindigul |  மதுபோதையில் கத்தியைக் காட்டி பிரச்சனை: தட்டிக் கேட்ட பாஜக பிரமுகருக்கு  கத்திக்குத்து | Tamil Nadu News in Tamil

இதனால் பாதிப்படைந்த மீனாட்சி தன்னுடைய பிள்ளைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இந்த சம்பவம் அறிந்த கந்திலி காவல்துறை கத்திக்குத்து சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்தது. அத்துடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஐந்து வயது பெண்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 10 வயது சிறுவர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News