Petrol, Diesel Price: இன்றைய (ஜூன் 12) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

கடந்த சில நாட்களாக, பெட்ரோல் டீசல் விலையில் சிறிது ஏற்ற இறக்கம் காணப்பட்ட நிலையில், இன்று இன்று பெட்ரோல் விலை சிறிது அதிகரித்துள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 12, 2021, 08:51 AM IST
  • கடந்த சில நாட்களாக, பெட்ரோல் டீசல் விலையில் சிறிது ஏற்ற இறக்கம் காணப்பட்டது.
  • பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி விலைகளை நிர்ணையிக்கின்றன.
  • சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை, பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது
Petrol, Diesel Price: இன்றைய (ஜூன் 12) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் title=

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது பெட்ரோல் மற்றும் டீசல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை, பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

ஆனால் தற்போது இந்தியன் ஆயில்(Indian Oil) , பாரத் பெட்ரோலியம் (bharat Petroleum), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (Hindustan Petroleum) ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி விலைகளை நிர்ணையிக்கின்றன. அதன் விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களுக்கு பின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் விலையை (Petrol, Diesel Price) உயர்த்தி வருகின்றன. சில இடங்களில் சதம் அடித்துள்ளது. கடந்த சில நாட்களாக, பெட்ரோல் டீசல் விலையில் சிறிது ஏற்ற இறக்கம் காணப்பட்ட நிலையில், இன்று இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் என்ற அளவிலும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் என்ற அளவிலும் அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 97.19 ரூபாய் என்ற அளவிலும்,, டீசல் விலை லிட்டருக்கு 91.42 ரூபாய் என்ற அளவிலும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து லிட்டர் 97.43 ரூபாய் என்ற அளவிலும் , டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து 91.46 ரூபாய் என்ற அளவிலும்விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் (Corona Virus) பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் பொது முடக்கம்  அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றம் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு விலைகளில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News