கிருஷ்ணகிரி கொடூரம்! காதல் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை

Krishnagiri Murder News: கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை. இருசக்கர வாகனத்தில் சென்ற போது பெண்ணின் உறவினர்கள் கொலை செய்து இருப்பதாக காவல்துறை தகவல். 

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 21, 2023, 04:11 PM IST
  • பெண்ணின் உறவினர்கள் கொலை செய்து இருப்பதாக காவல்துறை தகவல்.
  • கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
  • வேலைக்கு சென்றவரை வழிமறித்து அவனது கழுத்தை கத்தியால் அறுத்து உள்ளனர்.
கிருஷ்ணகிரி கொடூரம்! காதல் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை

Crime News: கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் வயது 28 இவர் டைல்ஸ் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இந்த காதல் திருமணத்தை பெற்றோருக்கு பிடிக்காத நிலையில், இன்று மதியம் ஜெகன் கிட்டம்பட்டியில் இருந்து டைல்ஸ் வேலை செய்வதற்கு காவேரிப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெகனை வழிமறித்த அவரது மாமனார் சங்கர் மற்றும் அவரது உறவினர்களோடு ஜெகனை வழிமறித்து அவனது கழுத்தை கத்தியால் அறுத்து உள்ளனர்.

மேலும் படிக்க: உருளைகிழங்குடன் இதயத்தை சமைத்த கொலைக்காரன்... கொடூரம்!

இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையறிந்த பொதுமக்கள் அங்கு விரைந்து வந்து பார்க்கும்போது சங்கர் மற்றும் அவருடன் வந்த நபர்கள் தப்பித்து ஓடி விட்டனர். 

இந்த கொடூரக்கொலை குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து ஜெகனின் உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் டேம் ரோடு பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த கொலை சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்க: முதலிரவில் எதுவும் நடக்கல... வார்த்தையை விட்ட மணப்பெண் - கொடூரமாக கொன்ற மாப்பிள்ளை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News