Tamil Nadu Today Latest News Live Updates: தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் வானிலை நிலவரத்தின் அப்டேட்டை இதில் காணுங்கள்.
புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசால் பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து, சட்டப்பேரவையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்து அல்லு அர்ஜுன் மீது பல குற்றச்சாட்டுகளை நேற்று முன்வைத்தார். தொடர்ந்து நேற்றிரவு அத்தனை குற்றச்சாட்டுகளையும் மறுத்த அல்லு அர்ஜுன் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கவே சில முயற்சிக்கின்றனர் என்றார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் இன்றும் சில அப்டேட்கள் வரலாம்.
அந்த வகையில், உள்ளூர், மாநில, தேசிய, அரசு திட்டங்கள், ஆன்மீகம், விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம், அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள், பொங்கல் சிறப்பு தொகுப்பு தகவல்கள் என இன்றைய (டிச. 22) முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு காணலாம்.