Thalapathy Vijay TVK Conference Live Updates: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிராவாண்டியை அடுத்த வி.சாலையில் இன்று நடைபெறுகிறது. சுமார் 85 ஏக்கர் பரப்பரளவில் இந்த மாநாடு திடல் அமைந்துள்ளது. மொத்தம் 80 ஆயிரம் பேருக்கு அங்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் சுமார் 3 லட்சம் அளவில் தொண்டர்கள் அங்கு குவிய இருக்கிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய மாநாடு (TVK Conference) மாலை 4 மணியளவில் தொடங்கும் என கூறப்படுகிறது. மாநாட்டு மேடை அருகே இருக்கும் 100 அடி உயர கம்பத்தில் கட்சியின் கொடியை தவெக தலைவர் விஜய் (TVK President Vijay) ஏற்றிவைக்க உள்ளார். அதை தொடர்ந்து, மாலை 6 மணியளவில் நடிகர் விஜய் தனது உரையை தொடங்குவார் எனவும் கூறப்படுகிறது. இந்த உரையில் கட்சியின் கொள்கையை அவர் பிரகடனப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமிட்டுமின்றி கட்சியின் எதிர்கால திட்டமிடல், அரசியல் வியூகம் ஆகியவற்றையும் அவர் தனது உரையில் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், விஜய்யின் அரசியல் பயணத்தில் இன்று முக்கியமான நாள் எனலாம். அவரின் அரசியல் வாழ்வு எப்படி அமையப்போகிறது என்பதை இந்த மாநாடும், அவரது பேச்சும்தான் தீர்மானிக்கப்போகின்றன. அரசியல் களத்தில் அவர் மீதான எதிர்பார்ப்புகள், அவர் குறித்த பார்வைகள் அனைத்தும் இந்த மாநாட்டிற்கு பின் நிச்சயம் மாற்றம் அடையும், அது நேர்மறையாகவும் இருக்கலாம் எதிர்மறையாகவும் மாறலாம். விஜய் சுமார் 2 மணிநேரம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்த பேச்சையும், அரசியல் வீச்சையும் காண அவரது ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மாநில முழுவதும் இருந்து வி.சாலை மாநாட்டு திடல் நோக்கி இரவு முதலே வருகை தர தொடங்கிவிட்டனர்.
விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் (Tamilaga Vetri Kazhagam) முதல் மாநில மாநாட்டை நாடே உற்றுநோக்கி வருகிறது. இந்த மாநாடு குறித்த அனைத்து தகவல்களையும், செய்திகளையும் இங்கு உடனுக்குடன் தெரிந்துகொள்ள வாசகர்கள் இந்த பக்கத்துடனே இணைந்திருங்கள்.
இவற்றையும் படிங்க:
தவெக மாநாட்டில் விஜய் பேசப்போகும் 5 முக்கியமான விஷயங்கள்..!
களைக்கட்டும் தவெக மாநாட்டு அரங்கம்!! இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் வீர தமிழச்சியின் கட் அவுட்! யார் இந்த அஞ்சலை அம்மாள்?
விஜய் மாநாட்டு திடலில் பிரம்மாண்டமான பார்க்கிங் ஏற்பாடுகள்
தமிழக வெற்றிக் கழக மாநாடு நடக்கும் இடத்தின் ட்ரோன் காட்சிகள்
ரொம்ப ஆர்வமா இருக்கோம் - தவெக மாநாட்டுக்கு வந்த பெண் உற்சாகம்!!