இடத்தை தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: மத்திய அரசு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Jul 28, 2021, 01:47 PM IST
இடத்தை தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: மத்திய அரசு

கடந்த 2015ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபப்டும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் (Madurai AIIMS) மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி (PM Narendra Modi) அடிக்கல் நாட்டினார். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் தற்போது தமிழகத்தோடு அறிவிக்கப்பட்ட மற்ற மாநிலங்களின் எய்ம்ஸ் (All India Institute Of Medical Sciences) மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், மதுரையில் மட்டும் கட்டுமானப் பணிகள் மெதுவாகவே நடைபெற்று வருகிறது.

ALSO READ | Covaxin: AIIMS தில்லியில் 2-6 வயது குழந்தைகளுக்கு 2வது டோஸ் பரிசோதனை விரைவில்

இதனிடையே, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டும் வரை தற்காலிக இடத்தில் தொடங்கி எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை மற்றும் வெளி நேயாளிகள் பிரிவை தொடங்கவும் உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். 

இந்த மனுவானது விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுரை எய்ம்ஸ் நிர்வாக முடிவின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கும். இந்த ஆண்டு எய்ம்ஸில் 50 மாணவர்களுக்கு சேர்க்கையை தொடங்கும். மத்திய அரசிடம் பரிந்துரை அளித்துள்ளோம். அதன்படி தமிழ்நாடு அரசின் திட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தால் அது செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்., மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். செலவினம், அலுவலர் தேர்வு, உட்கட்டமைப்பு ஆகியவற்றை மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக்கொள்ளும். தற்காலிக இடத்தை தமிழக அரசு தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸில் 50 முதல் 100 மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | எய்ம்ஸ் மருத்துவமனை பணியை விரைவுபடுத்த பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News