மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. அதன்பிறகு எந்தவித பணிகளும் நடைபெறவே இல்லை. இது குறித்து திமுக மற்றும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஆகியோர் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி வந்தனர். குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்த பிரச்சாரம் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. இப்போது நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை தனியார் நிறுவனம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்று தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க | பிரதமர் மோடி - பிடிஆர் ரகசிய சந்திப்பு..! வெளியான புகைப்படம் - பின்னணி என்ன?
இந்த எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் கட்டப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரைக்கு வந்து அடிக்கல் நாட்டினார். 870 படுக்கை வசதி, 38 படுக்கைகளுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சை மையம், மாணவர்கள், செவிலியர்களுக்கென வகுப்பாறை கட்டிடம், ஆய்வகக்கூடங்கள் இடம்பெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக 1624 கோடி ரூபாய் ஜப்பான் நிதியுதவியுடன் பிரம்மாண்டமாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
ஆனால், இந்த 5 ஆண்டுகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு 12 அடி உயர சுற்றுச்சுவர், 21 கோடி மதிப்பீட்டில் ஆறு கிலோ மீட்டருக்கு சாலை பணிகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில் தான் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை வாஸ்து பூஜையுடன் தனியார் கட்டுமான நிறுவனம் தொடங்கியது. இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 3 வாரத்தில் 3 முறை தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை ஏன் தொடங்கி வைக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தேர்தலுக்காக நடத்தப்படும் கண்துடைப்பு நாடகம் என தெரிவித்திருக்கும் சு.வெங்கடேசன் எம்பி, ஒருவேளை டிசம்பரில் தேர்தல் வந்திருந்தால் அக்டோபரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை தொடங்கியிருப்பார்கள் என விமர்சித்துள்ளார். மக்களை ஏமாற்றுவதற்காக இந்த தேர்தல் நாடகத்தை அவர்கள் நன்கு புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | பரபரக்கும் நீலகிரி தொகுதி - அதிமுகவுக்கு திமுக பகிரங்க சவால்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ