‘மாமியார் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’: நெகிழ வைத்த மதுரை மாமியார்!!

மாமியார் கொடுமை, மருமகளுக்கு இழைக்கப்படும் அநீதி, மாமியாரை மதிக்காத மருமகள், மாமியாரை கொடுமைப்படுத்தும் மருமகள்….இப்படி கேட்டு பழகிப்போன காதுகளுக்கு இந்த செய்தியைக் கேட்டால் நம்ப முடியாமல்தான் இருக்கும்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jul 29, 2020, 01:44 PM IST
‘மாமியார் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’: நெகிழ வைத்த மதுரை மாமியார்!!
Photo Credits: DTNext

மதுரை: மாமியார் கொடுமை, மருமகளுக்கு இழைக்கப்படும் அநீதி, மாமியாரை மதிக்காத மருமகள், மாமியாரை கொடுமைப்படுத்தும் மருமகள்….இப்படி கேட்டு பழகிப்போன காதுகளுக்கு இந்த செய்தியைக் கேட்டால் நம்ப முடியாமல்தான் இருக்கும். ஆனால், நம்புங்கள்!! இது கதை அல்ல, நிஜம்!!

மதுரையைச் (Madurai) சேர்ந்த அபுல் கலாம் மற்றும் அஹிலாவின் (Ahila) மகன், ஷப்னா என்பவரை ஜூலை மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். தற்போதிருக்கும் கொரோனா தொற்றுநோய் காரணமாக அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் இருப்பதால், திருமண விழாவில் 20 விருந்தினர்கள் மட்டுமே கலந்து கோண்டனர்.

கொரோனா (Corona) மற்றும் ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதுமண தம்பதிகள் திருமணத்திற்குப் பிறகான சடங்குகள் மற்றும் விழாக்களுக்கு, தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் மணமகளின் மனம் வருத்தப்படாமல் இருக்க, மணமகளின் மாமியார் அஹிலா, தனது மருமகளுக்காக 101 வகை உணவுகளை தயார் செய்து அசத்தினார்.

அஹிலா, பிரியாணி, ஃப்ரைட் ரைஸ், பரோட்டா, முட்டை, காடை, சூப்கள், பழச்சாறுகள் உள்ளிட்ட 101 உணவு வகைகளை சமைத்தார். மிகுந்த பாசத்துடன் தனது மருமகளுக்காக அவர் இதை செய்ததால், சமையல் முதல் அதை வரிசைப் படுத்தி வைத்து, பரிமாறுவது வரை அனைத்தையும் தானே செய்து அசத்தினார்.

மாமியாரின் இந்த மனதைக் கவரும் சைகை வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் ஒரு மாமியார் தனது மருமகனுக்கு 67 வகையான உணவுடன் விருந்தளித்த மற்றொரு வீடியோ வைரலானது. தற்போது, தனது புது மருமகளுக்கு இந்த மதுரை மாமியார் வழங்கிய பிரமாண்ட விருந்து மதுரையில் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் வைரலாகி பேசப்படுகிறது. இப்படியும் ஒரு மாமியாரா என அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். மாமியாருக்கு பாராட்டு மழை பொழிகிறது. அதற்கு அவர் தகுதியானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ALSO READ: கொரோனா காலத்து கொடை வள்ளல்கள்: காரில் உலா வந்த கர்ணப் பிரபு!!

மாமியாரின் இந்த கவனிப்பால் மருமகள் திக்குமுக்காடி நிற்கிறார். மாமியாரிடம் அன்பைப் பொழிகிறார். தனது மனைவியும் தனது தாயும் இப்படி இருப்பதைப் பார்த்து மணமகனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது. இவர்கள் ஒற்றுமையாக இருந்தால் அதனால் மிகப்பெரிய லாபம் அவருக்குத் தானே கிடைக்கும்!!

ALSO READ: தாயை கருணைக் கொலை செய்த மகன்… ஸ்ரீபெரும்புதூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!