உண்மையான பக்தி என்பது வேறு, ராமரை வியாபாரம் ஆக்குவது என்பது வேறு என்று ராமரே மோடிக்கு பதில் சொல்லி இருக்கிறார். என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மதுரையில் இருந்து டெல்லி செல்வதற்காக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தன்னுடைய கருத்தைத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு எண்ணிக்கை என்பது ஒவ்வொரு அதிமுக தொண்டனும் பதற வேண்டிய விஷயம் மிகவும் ஆபத்தான விஷயமாக அதிமுகவிற்கு மாறிவிட்டது என்று அவர் தெரிவித்தார்.
தமிழகம் மோடிக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. இந்த அலையின் தாக்கம் தான் 40க்கு 40 என தமிழக மக்கள் கொடுத்த முடிவு என்று மாணிக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
கடைசிவரை வாக்கு எண்ணிக்கையில் முன்னும் பின்னுமாக இழுபறியில் இருந்து, இறுதியில் தானே வெற்றி பெற முடிந்தது, அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற முடியவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொரு விதமாக நடைபெறும் இறுதியாக யார் வெற்றி பெறுகிறார் என்பது தான் முக்கியம். இழுபறியை பற்றியோ அல்லது இரண்டாவது இடத்தை பற்றியோ யாரும் கவலைப்படுவதில்லை. இது நாடாளுமன்றத் தேர்தலில் முறை. விருதுநகர் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் பாஜக வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த மாணிக் தாகூர், அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக தனது பணியை செய்யாமல் இருக்கிறது என்பதைத்தான் இந்த முடிவுகள் தெளிவாக காட்டுகிறது என்று தெரிவித்தார். மேலும், அதிமுகவின் வாக்குகள் பாஜகவிற்கு செல்கின்றது என்றும், எம்ஜிஆர் ஜெயலலிதா அம்மையாரின் தொண்டர்கள் பதற வேண்டிய விஷயம் இது என்றும் கூறிய அவர், பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிப்பது என்பது அதிமுகவிற்கு மிகவும் ஆபத்தான விஷயம் என்று எச்சரித்தார்.
இந்தியா கூட்டணி அடுத்த கட்ட நகர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த மாணிக் தாகூர், இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று மாலை ஆறு மணிக்கு டெல்லியில் சந்திக்கிறார்கள் அதன் பிறகு அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்தார் .
ராமர் கோயில் உள்ள அயோத்தி மக்களவைத் தொகுதியில் பாஜக தோல்வி குறித்த கேள்விக்கு பதிலளித்த மாணிக் தாகூர், உண்மையான பக்தி என்பது வேறு, ராமரை வியாபாரம் ஆக்குவது என்பது வேறு என்று, ராமரே மோடிக்கு பதில் சொல்லி இருக்கிறார் என்று தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ