ஒருவருக்கொருவர் மரியாதையாக பேச வேண்டும் என நானும், ரஜினியையும் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம் என கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பேச்சு..!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் இணைந்து பாலச்சந்தரின் திருவுருவ சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் நாசர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
சிலை திறப்பு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில்; எங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கலாம் ஆனால் எங்கள் இருவருக்கும் நாங்கள் தான் முதல் ரசிகன் என்றும் நானும் ரஜினியும் ஒருவரை ஒருவர் விமர்சிப்போம், பாராட்டிக்கொள்வோம் என்றும் தெரிவித்தார். ரஜினிகாந்த திரையுலகிற்கு வந்த முதல் ஆண்டே ஐகான் விருதுக்கு தகுதி பெற்று விட்டதாகவும், தாமதமான கவுரவம் என்றாலும் ரஜினிக்கு தக்க கவுரவமாக ஐகான் விருது அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். ரஜியின் உழைப்பு பிரமிக்கத்தக்கது என தெரிவித்த அவர், விருது வழங்குவதுற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.
Kamal Haasan: Both of us (Rajinikanth & Kamal Haasan), at a point in time, decided that we'll respect each other as we believed that future was going to be good for both of us. Today, we continue to respect, criticize & endorse each other. pic.twitter.com/fOHNiY1Jn5
— ANI (@ANI) November 8, 2019
மேலும், நாங்கள் ஒருவருக்கொருவர் மரியாதையாக பேச வேண்டும் என நானும், ரஜினியும் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம் என்றும், ரஜினி கையையும், எனது கையையும் யாராலும் பிரிக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.