அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை விளக்கம் தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமலாக்கத்துறை விளக்கம்:
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று 13 மணி நேர சோதனையில் ஈடுபட்டனர் இந்த சோதனையில் பல்வேறு குற்ற ஆவணங்கள், ரூ. 81.7 லட்சம், வெளிநாட்டு நாணயம் (பிரிட்டிஷ் பவுண்டுகள்) தோராயமாக. ரூ. 13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ரூ.41.9 கோடி நிலையான வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளது.
During the searches, various incriminating documents, cash amounting to Rs. 81.7 lakh, foreign currency (British pounds) equivalent to approx. Rs. 13 lakhs was seized and Fixed Deposits of Rs.41.9 Crore have been freezed.
— ED (@dir_ed) July 18, 2023
ட்விட்டர் வாயிலாக இந்த தகவலை அமலாக்கத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை:
தமிழகத்தின் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி வீட்டிலும் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். சுமார் 13 பணி நேரம் இந்த சோதனை நடைப்பெற்றது. பொன்முடிக்கு சொந்தமாக சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள வீடுகளில் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். விக்கிரவாண்டி சாலையில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். பொன்முடியின் மகனும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணியின் வீட்டிலும் சோதனை நடந்தது.
பொன்முடி மீதுள்ள வழக்கு..!
கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்த போது அமைச்சர் பொன்முடியும் அமைச்சராக பணியாற்றினார். அப்போது, இவரும் இவரது மகன் கவுதம சிகாமணியும் அவர்களின் உறவினர்களுடன் சேர்ந்து செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறி அப்போது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, கடந்த ஆண்டுதான் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுப்பட்டார். இவர், சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அவர் மீது தொடங்கப்பட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.
அமலாக்கத்துறையினர் விசாரணை:
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டில் சுமார் 13 மணிநேரம் நேற்று சோதனை நடைப்பெற்றது. இதைத்தொடர்ந்து, அவர் சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலிருந்து சாஸ்திரி பவனுக்கு விசாரணைக்காக நேற்று இரவு அழைத்து செல்லப்பட்டுள்ளார். பொன்முடியின் காரிலேயே அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். இரவு முழுவதும் அமலாக்கத்துறையினர் பொன்முடியை விசாரணை நடத்தினர். அதிகாலை 3 மணி அளவில் அவரை விசாரணையிலிருந்து விடுவித்து மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து அவர் இன்று ஆஜரானார். சில மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அமலாக்கத்துறையினர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இருந்து பரிமுதல் செய்த சொத்து மற்றும் ஆவணங்களின் விவரங்களை மொத்தமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | கைதா-விசாரணையா..? பொன்முடியை அமலாக்கத்துறையினர் அழைத்து சென்றது ஏன்..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ