புதுடெல்லி: சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தலில் (Tamil Nadu by Election) அதிமுக (AIADMK) அபார வெற்றி பெற்றது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விக்கிரவாண்டி (Vikravandi) தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் (TN CM) எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy), தமிழகத்தில் வெற்றிடம் என்பது இல்லை என்பதற்கு இடைத்தேர்தல் வெற்றியே உதாரணம். அதிமுக மட்டுமே தமிழகத்தை ஆட்சி செய்ய முடியும். எம்ஜிஆர் (M. G. Ramachandran) போல பலர் திரையுலகில் (Kollywood) இருந்து வந்து தமிழகத்தை ஆளலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்களால் அது முடியாது. தமிழகத்தை பொறுத்த வரை யார் கட்சி தொடங்கினாலும், அதிமுக மட்டுமே ஆட்சி அமைக்கும்.
எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வரக் காரணம், அறிஞர் அண்ணா (C. N. Annadurai) கண்ட கனவை நனவாக்கவே. அதனால் தான் அதிமுக (All India Anna Dravida Munnetra Kazhagam) என்ற மிகப்பெரிய காட்சியை உருவாக்கினார். சாதித்து காட்டினார். அவர் மற்றவர்களை போல வீட்டில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர் அல்ல என கடுமையாக சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர நினைக்கும் நடிகர்களை தாக்கி பேசினார்.
தமிழக முதலமைச்சர் இப்படி பேசுவதற்கு முக்கிய கரணம் இருக்கிறது. அதாவது, இன்று சென்னையில் (Chennai) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த் (RanijiKanth), அரசியல் கட்சி ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன். தமிழகத்தில் சரியான ஆளுமைக்கு இன்னும் வெற்றிடம் இருப்பதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.