தமிழ்நாட்டில் யாருக்கும் நிபா பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் யாருக்கும் நிபா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 6, 2021, 04:29 PM IST
தமிழ்நாட்டில் யாருக்கும் நிபா பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  title=

கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுவன், நிபா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 5, 2021) காலை இறந்தார். கொரோனா பரவலை கேரளாவில் கட்டுப்படுத்த முடியாத நிலையில் தற்போது நிபா வைரஸ் (Nipah Virus) தாக்குதலும் ஏற்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதை மத்திய அரசு உறுதி செய்தது. மாநிலத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக மத்திய அரசு, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (NCDC) குழுவை மாநிலத்திற்கு உடனடியாக அனுப்பியது.

இந்நிலையில், தமிழகத்தில், கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள பகுதியில், மாநில அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. 

இதற்கிடையில், தமிழ்நாட்டில் நிபா பாதிப்பு ஏற்பட்டதாக இன்று இணையத்தில் வைரலாக பரவியது. கோயம்புத்தூரில் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.  

ALSO READ | கோழிக்கோட்டில் நிபா வைரஸால் சிறுவன் மரணம், கேரளாவுக்கு விரைந்த மத்திய குழு..!!!

இதை அடுத்து, தமிழ்நாட்டில் யாருக்கும் நிபா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் எவருக்கும் நிபா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்றும், இந்த தகவல் பொய்யான தகவல் என்றும் சுகாதார செயலர் தெளிவுபடுத்தியுள்ளார். 

தென்னிந்தியாவில் முதல் நிபா வைரஸ் நோய் (NiV) பரவல் மே 19, 2018 அன்று கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பதிவானது. ஜூன் 1, 2018 வரை மாநிலத்தில் 17 இறப்புகள் மற்றும் 18 உறுதிப்படுத்தப்பட்ட  தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: Snake Poison as Covid Drug: பாம்பின் நஞ்சு, கோவிட் தொற்றுநோய்க்கு சிறந்த மருந்தாகலாம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News