தமிழக அரசு ஏன் கலைஞருக்கு பேனா சிலை வைக்கக்கூடாது? கேள்வியும் பதிலும்

முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு மெரினாவில் நினைவிடம் அமைப்பதில் எந்த விதிமீறலும் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 3, 2023, 08:36 PM IST
  • கலைஞருக்கு மெரினாவில் நினைவிடம் அமைப்பதில் எந்த விதிமீறலும் இல்லை
  • விளக்கம் அளிக்கும் தமிழக அரசு
  • தமிழக அரசு ஏன் கலைஞருக்கு பேனா சிலை வைக்கிறது?
தமிழக அரசு ஏன் கலைஞருக்கு பேனா சிலை வைக்கக்கூடாது? கேள்வியும் பதிலும்

முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு மெரினாவில் நினைவிடம் அமைப்பதில் எந்த விதிமீறலும் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மெரினா கடற்கரையில் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு தடைகோரியும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்கள், சமாதிகளின் சுற்றுச்சூழல் விதிமீறல்களை ஆராயக்கோரியும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ராம்குமார் ஆதித்யன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இதற்கு  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி ஒளிபரப்பு துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில்,  கடலோர ஒழுங்குமுறை மண்டல இரண்டு விதிகளின் படி கட்டுமான பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | அனைத்து சமூகத்தினரும் இன்று சாமி தரிசனம்... தீர்ந்ததா சேலம் கோயில் நுழைவு பிரச்னை?

கடலோர ஒழுங்குமுறை சட்டத்தின் படி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு அரசின் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் அண்ணா நினைவிடத்திற்குள் தான் கலைஞரின் நினைவிடமும் அமைந்துள்ளதால்  அதில் எந்த விதிமீறலும் இல்லை என பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

கலைஞருக்கு நினைவிடம் அமைக்க பொதுமக்களும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனவும், கடலோர ஒழுங்குமுறை ஆணைய விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பே அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்கள் கட்டப்பட்டதாகவும் தமிழக அரசின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Pen Statue

முன்னதாக, கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் பேனா சிலை அமைப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென்று முன்னாள அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | நாட்டில் முதல்முறையாக தமிழக பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: கனிமொழி கருணாநிதி பெருமிதம்

அறிவாலயத்தில் பேனா சிலை வைக்க வேண்டியது தானே? சென்னையின் அடையாளமே பறிபோகும் நிலை உருவாகும். எதிர்க்கட்சி எனும் பெயரில் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம். கருணாநிதி புகழ்பாடும் அரசாகவே இந்த அரசு உள்ளது என்று எதிர்கட்சிகள் இந்த சிலைக்கு கண்டனம் தெரிவித்து வந்தன. 

மேலும் படிக்க | ஆளுநர் தேநீர் விருந்தில் முதலமைச்சர் கலந்துகொண்டது ஏன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News