Coonoor Accident: விமான விபத்தில் சந்தேகமா? டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்

 ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சந்தேகம் உள்ளதா? என்பதற்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கமளித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 10, 2021, 04:52 PM IST
  • விமான விபத்து நடந்த இடத்திற்கு சென்ற டிஜிபி சைலேந்திரபாபு
  • விபத்துக்குள்ளானவர்களை உடனடியாக மீட்ட அப்பகுதி மக்களுக்கு நன்றி
  • விமான விபத்தில் எந்த சந்தேகமும் இல்லை என விளக்கம்
Coonoor Accident: விமான விபத்தில் சந்தேகமா? டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் title=

முப்படை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் பயணித்த ஹெலிக்காப்டர் குன்னூர் பகுதியில் கடந்த புதன்கிழமை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் வீரமரணமடைந்தனர். குரூப் கேப்டன் சிங் பெங்களூரில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்ற தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, அப்பகுதியை ஆய்வு செய்தார். பின்னர், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப உதவிய அப்பகுதி மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

ALSO READ | IAF: ஹெலிகாப்டர் விபத்துக்கான ஊகங்களை தவிர்க்கவும்; விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது

இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், " ஹெலிக்காப்டர் விபத்து குறித்து நஞ்சப்ப சத்திரம் மக்கள் தகவல் அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறையினரும் சம்பவிடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். அதன்பேரில், 12.25 மணிக்கு தீயணைப்புத்துறை, காவல்துறை, தடவியல் துறையினர் சம்பவ இடத்தை அடைந்தனர்.

3 பேரை உயிருடன் மீட்டு ஆம்புலன்சில் அனுப்பிய மக்களுக்கு நன்றி. இது தொடர்பாக இதுவரை 26 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். அதிவிரைவுப்படை விசாரணையும் நடைபெற்று வருகிறது. விபத்தில் எந்த சந்தேகமும் இல்லை. முப்படைத் தளபதி வரும்போது வான்வழியாக சென்றாலும் சாலை மார்க்கத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். நீலகிரி மாவட்டம் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டிருந்தது. அதனால், சந்தேகதிற்கிடமான வகையில் யாரும் நுழையமுடியாது" எனத் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் சிலர், விமான விபத்து குறித்து சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், டிஜிபி இத்தகைய விளக்கதைக் கொடுத்துள்ளார். 

ALSO READ | Amul: ஜெனரல் பிபின் ராவத் சிப்பாய்களின் நண்பர்; எதிரிகளின் வாள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News