மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பூரண மதுவிலக்கு குறித்த கேள்விக்கு, பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் தான் கள்ளச்சாராயத்தையும், விஷ சாராயத்தையும் ஒழிக்க முடியும் என்பது எனது கருத்து. அதை அரசு செய்ய வேண்டும். சசிகலா சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு, ஏற்கனவே நான் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன். மாண்புமிகு சின்னமாகவும் சந்திக்கிறார் அவரது முயற்சி வெற்றி பெறட்டும். 90 சதவீத தொண்டர்களை சசிகலா இணைத்ததாக கூறியதை நான் வரவேற்கிறேன்.
மேலும் படிக்க | யார் இந்த அருண் ஐபிஎஸ்? சென்னையின் காவல் ஆணையர் பற்றிய தகவல்கள்!
சட்ட ஒழுங்கு குறித்த கேள்விக்கு, சட்ட ஒழுங்கு தமிழகத்தில் சீர்கெட்டு கிடைக்கிறது. அதை சரிப்படுத்தக் கூடிய வழியை முதல்வர் செய்ய வேண்டும் அப்படி செய்யத் தவறினால் அடுத்த முறை ஆட்சிக்கு வருவது கேள்விக்குறியாகி படுதோல்வி அடைவார். புதிய மூன்று கிரிமினல் சட்டங்கள் குறித்த கேள்விக்கு, ஆங்கிலத்தில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் ஒருபோதும் அதிமுகவுக்கு உண்மையாக இருந்தது கிடையாது என்ற இபிஎஸ் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, நீண்ட விளக்கத்தை நேற்று அளித்திருக்கிறேன், இதற்கு மேல் விளக்கம் சொல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன், கட்சியின் நலன் கருதி. அவரைப் போல் நான் தெனாவட்டாகவோ, சர்வாதிகாரத்தோடு பேசமாட்டேன் என்பது நாட்டு மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நன்றாக தெரியும். கட்சியை இணைப்பது தான் ஒரே வழி. இனி வரக்கூடிய தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமென்றால் கட்சி இணையாமல் அது சாத்தியமில்லை என்பது என்னுடைய கருத்து மட்டும் அல்லாமல் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தும் கூட.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிவுப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கும் பொய்மையின் மொத்த உருவம் ‘துரோகி’ திரு. எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனம். pic.twitter.com/fP9apjoxvQ
— O Panneerselvam (@OfficeOfOPS) July 8, 2024
மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று இபிஎஸ் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, என்னை மன்னிப்பு கடிதம் கொடுக்கச் சொல்வதற்கு அவர் யார்? பொதுச்செயலாளர் வழக்கு இன்னும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக தொண்டர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கேள்விக்கு, இரு இலைச் சின்னம் தேர்தலில் அங்கு போட்டியிடவில்லை. அதனால் இரு இலை சின்னத்துடன் கூடிய மாங்கனி அங்கு போட்டியிடுகிறது என்று சொன்னேன், அதுதான் நடக்கப்போகிறது. அதிமுகவில் யார் தலைமை ஏற்க வேண்டும் என்ற கேள்விக்கு, இந்த இயக்கம் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். உறுதியாக ஒரு தொண்டர் அதிமுக தலைமை ஏற்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ