காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் வினாடிக்கு 1.77,000 கனஅடி எட்டியுள்ளது!
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருகிறது. மேலும் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 1.77,000-மாக அதிகரிக்கப்பட்டு உள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகின்றது.
அதன்படி சுரங்கம் வழியாக 25000 கனஅடி நீரும், 16 கண் மதகு வழியாக 100000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. சுமார் 5 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருவதால் அப்பகுதி மக்கள் அணையினை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
தற்போதைய நிலைவரப்படி கர்நாட்டகாவின் கிரிஷ்ணராஜ சாகர் அணை நீர்மட்டம் 121.46 கனஅடி, நீர்வரத்து விநாடிக்கு 1.23 லட்சம் கனஅடியாக உள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் 79 கனஅடி, நீர்வரத்து விநாடிக்கு 67,500 கனஅடியாக உள்ளது.
காவிரிக்கு வரும் நீர் திறந்துவிட பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி கரையோறு பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரினை திறந்துவிட முடிவு செய்யபட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்!