குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த டிடிவி தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு நாளை விசாரணை.
முறைகேடாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக கடந்த 1996-ம் ஆண்டு டிடிவி தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கை அமலாக்கத் துறை தொடர்ந்தது. இந்த வழக்கை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமைன்றம், டிடிவி.தினகரன் மீதான அன்னிய செலாவணி வழக்கை விசாரிக்க இடைகால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை 3 மாதத்திற்குள் விரைந்து முடிக்கவும், ஏற்கனவே செய்யப்பட்ட குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்து புதிதாக குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இன்று தினகரன் மீது பதிவு செய்துள்ள குற்றச்சாட்டு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பினர்களின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை நாளை(3-ம் தேதி) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என இந்த வழக்கை நீதிபதிகள் வைத்தனர்.
TTV Dinakaran arrives in Metropolitan Magistrate Court in Chennai to appear in Foreign Exchange Regulation Act(FERA) case pic.twitter.com/1vCL1WWp2C
— ANI (@ANI_news) August 1, 2017
டிடிவி.தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கை தொடரப்பட்டு ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது