தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு இறுதி தேர்வை முன்கூட்டி நடத்த திட்டம்

தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித் தேவை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 15, 2023, 12:36 PM IST
  • இந்தியா இரண்டு இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது.
  • தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
  • ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் முன்கூட்டியே தேர்வுகளை முடிக்க திட்டம்.
தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு இறுதி தேர்வை முன்கூட்டி நடத்த திட்டம் title=

வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலி: இந்தியாவில் எச்3என்2 வைரஸால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைத் தான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நோயாளிகள் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைப் புகாரளிக்கின்றனர், இது தோராயமாக 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். இருமல், காய்ச்சல், குளிர், குமட்டல், வாந்தி, தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, மூக்கு ஒழுகுதல் மற்றும் தொடர்ந்து தும்மல் ஆகியவை H3N2 இன்ஃப்ளூயன்ஸாவின் பொதுவான அறிகுறிகளாகும் . கடுமையான சந்தர்ப்பங்களில், நோயாளி மார்பில் அசௌகரியம், விழுங்குவதில் சிரமம் மற்றும் தொடர்ச்சியான காய்ச்சலை அனுபவிக்கலாம்.

இதனிடையே H3N2 காரணமாக இந்தியா இரண்டு இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது - ஒன்று கர்நாடகாவில் மற்றொன்று ஹரியானாவில் - மற்றொரு மரணம் மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளது. இதற்கிடையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த வைரஸ் காய்ச்சல் அதிவேகமாக பரவிவருகிறது. இதனை தடுக்க தமிழ்நாடு அரசு, காய்ச்சல் சிறப்பு முகாம்களை நடத்திவருகிறது. அதே சமயம் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் வேகமும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

மேலும் படிக்க | கள்ளழகர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.56 லட்சம் ரொக்கம் - தங்கம் வெள்ளி: காணிக்கை விவரம்

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித் தேவை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. வைரஸ் காய்ச்சல் பரவல், கோடை வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் தேர்வுகளை முன்னதாக நடந்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காய்ச்சல் பரவிவருவதை அடுத்து ஆண்டு தேர்வை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 17 ஆம் தேதியே தொடங்க ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் முன்கூட்டியே தேர்வுகளை முடித்து, விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு... எழுதாதவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

மேலும் படிக்க | 'எடப்பாடியே வெளியேறு' ஓபிஎஸ் தரப்பினர் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News