எனக்கு தோனி மிகவும் பிடிக்கும்.. ஆனால்..! அன்புமணி ராமதாஸ் சொன்ன விஷயம்!

திராவிட மாடல் என்பது முதலாளித்துவம், பாட்டாளி மாடல் என்பது விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கானது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி பேசியுள்ளார்.   

Written by - RK Spark | Last Updated : May 2, 2023, 07:20 AM IST
  • பாட்டாளி மாடல் VS திராவி மாடல் விவாதத்திற்கு நான் தயார்.
  • CSK வில் ஒரு தமிழன் கூட இல்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது.
எனக்கு தோனி மிகவும் பிடிக்கும்.. ஆனால்..! அன்புமணி ராமதாஸ் சொன்ன விஷயம்! title=

வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா கொண்டு வந்ததே தவறு, இந்த சட்டம் வந்த பொழுது முதல் ஆளாக எதிர்த்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி, இப்பொழுது அதை நாங்கள் திரும்ப பெற்றுக் கொள்கிறோம் என திமுக கடுமையான எதிர்ப்புக்கு பிறகு சொல்லி உள்ளது என காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில்  நடைபெற்ற பாமக 2.0 விளக்க பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி பேசியுள்ளார்.  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பாமக 2.0 விளக்க பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். இக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,  மே தினத்தில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, பாட்டாளிகளுக்கும், உழைப்பாளிகளுக்கும், விவசாயிகளுக்கும் தொடங்கப்பட்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. ஆனால்  தமிழ்நாட்டில், திராவிட ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திராவிட ஆட்சி என்று சொன்னால், இரு கட்சிகளை சார்ந்த ஆட்சி தான், 1967 இல் தொடங்கிய திராவிட ஆட்சி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 55 ஆண்டுகள் கடந்தும் திமுக, அண்ணா திமுக ஆகிய கட்சிகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகிறது. மக்கள் மாற்றம் வேண்டும் என நினைக்கின்றார்கள். நான் நீண்ட காலமாகவே விவாதத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கிறேன். 

மேலும் படிக்க | இருசக்கர வாகனத்துக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன்... நெல்லையில் பரபரப்பு!

 

திராவிட மாடல் VS பாட்டாளி மாடல் விவாதத்திற்கு நான் தயார், திராவிட கட்சிகள் நீண்ட காலமாக ஆட்சி செய்து வருகிறார்கள் , திராவிட மாடல் என பேசிக்கொண்டு வருகிறார்கள், திராவிட மாடல் என்பது முதலாளித்துவம், பாட்டாளி மாடல் என்பது விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கானது என பேசினார். மேலும் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், முதலாளித்துவதற்காக ஒரு சட்டத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளது, 100 ஏக்கருக்கு மேல் தொழிற்சாலை வைத்திருப்பவர்களுக்கு, சிறப்பு அதிகாரத்தை இந்த சட்டம் வழங்குகிறது. சாதாரண மக்கள் நீர் நிலையில் ஒரு வீடு கட்ட கூடாது,ஆனால் தொழிற்சாலையை அந்த இடத்தில் கட்டலாம்,இந்த சட்டம் குறித்து தெரியவில்லை, உடனடியாக அரசு இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார். அதேபோல் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா கொண்டு வந்ததே தவறு. 

பாஜக கொண்டு வந்த பொழுது இதே திமுக அதை எதிர்த்தது. இப்பொழுது அதை நாங்கள் திரும்ப பெற்றுக் கொள்கிறோம் என திமுக கடுமையான எதிர்ப்புக்கு பிறகு சொல்லி உள்ளது. இந்த சட்டம் வந்த பொழுது முதல் ஆளாக எதிர்த்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என்றும்,மக்களுக்கு இது குறித்து எல்லாம் தெரிவது கிடையாது, கிரிக்கெட் கிரிக்கெட் அதே தான் பார்க்கிறார்கள். அது பார்ப்பது தப்பு கிடையாது ஆனால் கிரிக்கெட் வாழ்க்கை கிடையாது. நானும் சிஎஸ்கே ஆதரவாளன் தான், எனக்கு தோனி மிகவும் பிடிக்கும், தோனிக்கு விசில் போடு, ஆனால் அந்த அணியில் ஒரு தமிழர்கள் கூட இல்லாமல் இருப்பது நிச்சயம் வருத்தம் தான், 20 வீரர்கள் இருக்கிறார்கள் அதில் ஒருவராவது தமிழர்கள் இருந்திருக்க வேண்டும், பெயரிலேயே சென்னையை வைத்துக் கொண்டு தமிழக வீரர்கள் இல்லாமல் இருப்பது என்ன நியாயம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News