இருசக்கர வாகனத்துக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன்... நெல்லையில் பரபரப்பு!

நெல்லை அரசு மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்துக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து சென்றனர்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 1, 2023, 11:29 PM IST
  • பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • கொம்பேரி மூக்கன் வகையை சேர்ந்த பாம்பு.
  • பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து விரும்பி பார்க்கப்படுகின்றன.
இருசக்கர வாகனத்துக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன்... நெல்லையில் பரபரப்பு! title=

நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே முகமது ரபீக் என்பவர் சலூன் கடை நடத்தி வருகிறார் இந்த நிலையில் இவரதுங கடைக்குள் திடீரென  பாம்பு ஒன்று புகுந்தது இதை கண்ட கடை உரிமையாளர் முகமது ரபீக் பதட்டத்துடன் அதை விரட்டியபோது அருகில் உள்ள இருசக்கர வாகனத்துக்குள் அந்த பாம்பு ஏறியது பின்னர் பாம்பு எங்கு சென்றது என தெரியாத நிலையில் அப்பகுதி மக்கள் பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதனை அடுத்து பாளையங்கோட்டை  தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று இருசக்கர வாகனத்தின் சீட்டை அகற்றி விட்டு பாம்பை வெளியே வரவைக்க கரப்பான் பூச்சி மருந்தான ஹிட் ( Hit) அடித்தனர் அப்போது அந்த பாம்பு பெட்ரோல் டேங் மேலே ஏறியது உடனே அந்தப் பாம்பை தீயணைப்புத் துறை வீரர்கள் பிடித்தனர் மேலும் அது கொம்பேரி மூக்கன் வகையை சேர்ந்த பாம்பு என்பது தெரியவந்த்து இதையடுத்து அந்தப் பாம்பை  வனப்பகுதியில் கொண்டு விட தீயணைப்பு துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நெல்லை மாநகரப் பகுதியில் இன்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டியது எனவே மழையின் காரணமாக பதுங்கி இருந்த பாம்பு வெளியே வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து விரும்பி பார்க்கப்படுகின்றன. எவ்வளவு பாம்பு வீடியோக்களை நாம் பார்த்தாலும், நம் கண்முன்னால் ஒரு பாம்பு வந்தால், சப்த நாடியும் ஒடுங்கித் தான் போகும். அதனால் தான் பாம்பு என்றால் படையே நடுங்கும் என கூறினார்கள்.

மேலும் படிக்க | சில்மிஷம் செய்த குரங்கை முறைத்த பெண்: 'பளார்..' ஒரே அடி...வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News