கலைஞர் கருணாநிதி-யுடன் ராசா மற்றும் கனிமொழி சந்திப்பு!

திமுக தொண்டர்கள் அணைவரும் அவர்களை ஆரவாரத்துடன் வரவேற்றனர்!

Last Updated : Dec 23, 2017, 02:12 PM IST
கலைஞர் கருணாநிதி-யுடன் ராசா மற்றும் கனிமொழி சந்திப்பு! title=

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2G அலைவரிசை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதி மகள் கனிமொழி  உள்ளிட்ட 14 பேர் குற்றமற்றவர்கள் என சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்ததை அடுத்து இன்று இருவரும் டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பினர்!


14:00 23-12-2017
கலைஞர் கருணாநிதி-யுடன் ராசா மற்றும் கனிமொழி சந்திப்பு!


திமுக தொண்டர்கள் அணைவரும் அவர்களை ஆரவாரத்துடன் வரவேற்றனர்!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா தொலைத்தொடர்பு துறை மந்திரியாக இருந்த காலக்கட்டத்தில், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2G அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டதில், அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கில் கடத்த டிச., 21 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தன. இந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. 

பின்னர் இவ்வழக்கு தொடர்பாக, ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.

6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் 21-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.சைனி கடந்த 5-ஆம் தேதி அறிவித்தார். கடத்த டிச., 21 அன்று முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதி மகள் கனிமொழி  உள்ளிட்ட 14 பேர் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

Trending News