முதல் முறையாக தனது ரசிகர்கள் மீது கோபம் கொண்ட ரஜினி.. காரணம் என்ன?

இந்த முறை ரஜினியின் பேச்சில் ஒரு கோபம் உண்ர்வு இருப்பதை உணரலாம். தனது நிலையை தெளிவாகச் விளக்கிச் சொல்லியும், திரும்பத் திரும்ப, கட்டாயப்படுத்துவது ஏன் என்ற கோபம் அதில் தெரிகிறது. 

Last Updated : Jan 11, 2021, 01:27 PM IST
  • டிசம்பர் 3ம் தேதி அரசியலுக்கு வருவதாக கூறிய ரஜினி, திடீரென வரப்போவதில்லை என்று அறிவித்தார்.
  • இதனால், அவரது ரசிகர்கள் ஆதரவாளர்கள் அனைவரும் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.
  • ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் என்ற கனவு தவிடு பொடியாகியது.
முதல் முறையாக தனது ரசிகர்கள் மீது கோபம் கொண்ட ரஜினி.. காரணம் என்ன? title=

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் எனவும் காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு ஒரு பேரிடியாக, ரஜினிகாந்த், தனது உடல் நிலை காரணமாக , அரசியலுக்கு ஒரு கும்பிடு போடுவதாக, டிசம்பர் இறுதியில் திடீரென அறிவித்தார். டிசம்பர் 3ம் தேதி அரசியலுக்கு வருவதாக கூறிய ரஜினி, திடீரென உடல்நிலையை காரணம் காட்டி, வரப்போவதில்லை என்று அறிவிப்பு, அவரது ரசிகர்கள் மட்டுமல்ல ஆதரவாளர்களுக்கும்  மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. 

இந்நிலையில், விரத்தி அடைந்த ரசிகர்கள், நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினியை (Rajinikanth) அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் அற வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

தற்போது மீண்டும் ஒருமுறை தான் அரசியலுக்கு வர போவதில்லை என்பதை ரஜினிகாந்த்  உறுதி படுத்தியுள்ளதோடு, தனது ரசிகர்கள் தன் பேச்சை மீறி நடந்து கொள்கின்றனர் என்பதை  வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார். ஆனால் இந்த முறை ரஜினியின் பேச்சில் ஒரு கோபம் உண்ர்வு இருப்பதை உணரலாம். தனது நிலையை தெளிவாகச் விளக்கிச் சொல்லியும், திரும்பத் திரும்ப, கட்டாயப்படுத்துவது ஏன் என்ற கோபம் அதில் தெரிகிறது. 

 

No description available.

 

ரஜினி தனது ரசிகர்கள் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்துவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கூட, தனது ரசிகர் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள், பணம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாக, வந்த தகவல்களை அடுத்து, அவர் பலமுறை குற்றம் சாட்டி அவர்களிடம் கடுமை யாக நடந்து கொண்டுள்ளார்.

ஆனால் பொது வெளியில் தனது ரசிகர்களின் செயல்பாடு குறித்து அவர் பகிரங்கமாக வருத்தத்தை பதிவு செய்திருப்பது இதுவே முதல் முறை எனக் கூறலாம். புகழ் பெற்ற நடிகர் ஒருவர் தனது ரசிகர்கள் தனது பேச்சைக் கேட்பதில்லை என்று அதிருப்தியையும் வருத்தத்தையும் பதிவு செய்வது தமிழக சினிமா வரலாற்றில் இதுதான் முதல் முறை  என்று கூறலாம். ஒருவர் தனது உடல் நிலை காரணமாக விலகி இருக்க நினைக்கும் போது, அவரது பிரச்சனையை உணர்ந்து கொள்ளாமல்,  அரசியலுக்கு வர வேண்டும், என வற்புறுத்தும் ரசிகர்களை இதன் மூலம் அவரை மேலும் நோகடிக்கின்றனர் என்றே கூற வேண்டும்.

அதனால், தான் ரஜினி தனது வருத்தத்துடன் கோபத்தையும் பதிவு செய்துள்ளார். இனியாவது, அவரது ரசிகர்கள் அவரை புரிந்து கொண்டு, அவரவர் வேலையை பார்க்க வேண்டும். அவருக்கு நெருக்குதல் அளிக்கும் வேலையை விட்டு விட வேண்டும்.

ALSO READ | ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் போராட்டம்..!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News