ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளன் விடுதலை, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும்  பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 18, 2022, 11:30 AM IST
  • பேரறிவாளன் விடுதலை
  • உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு
  • உறவினர்கள் கொண்டாட்டம்
ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளன் விடுதலை, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு title=

ஸ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் அவர்கள் அனைவருக்கும் கீழமை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பின்னர் அவர்களில் 9 பேர் கடந்த 1999 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதன்படி அந்த 9 பேர் மட்டும் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் மீதம் இருந்த பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்கும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டதுடன் ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

மேலும் படிக்க | பேரறிவாளனுக்கு விரைவில் திருமணம்.!

கடந்த 2014 ஆம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட நால்வரின் கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. 

இதனைத் தொடர்ந்து, கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பேரறிவாளன் மனுதாக்கல் செய்து, அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த வழக்கு நடைபெற்று கொண்டிருந்த போதே தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி பேரறிவாளன் தனி மனுவை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதனிடையே இந்த வழக்கில் 7 பேரை விடுதலை செய்யக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு 2018-ம் ஆண்டு கருத்துரு அனுப்பியது. இதனை ஆய்வு செய்த மத்திய அரசு, சிபிஐ வசம் இருக்கும் ஒரு வழக்கில் மாநில அரசு முடிவெடுக்க அதிகாரம் கிடையாது எனக் கூறி அந்த கருத்துருவை நிராகரித்தது. அத்துடன் எழுவரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந் நிலையில் தற்போது பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரும் மனு மீது மத்திய, மாநில அரசுகள் இடையே வாதங்கள் செய்யப்பட்டு வந்தது. மேலும் நீதிபதிகள் மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் பலவித கேள்விகளை எழுப்பியிருந்தனர். 

மேலும் படிக்க | 3 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இழுத்தடித்தது ஏன் ? - பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி 

குறிப்பாக, இந்த வழக்கில் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே முடிவு எடுக்கும் உரிமை உள்ளது என்ற மத்திய அரசின் வாதத்தை தவறு, இதில் மாநில அரசை தொடர்பானது. எனவே இதில் முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே அதிகம் உள்ளது. அதேபோல, மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் எப்படி அனுப்பலாம்? எனவும் நீதிபதிகள் கேள்வியெழுப்பி இருந்தனர். அத்துடன் பேரறிவாளன் ஆயுள் தண்டனை கைதி என்பதால் அவரின் விடுதலையில் ஆளுநர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தவறாகும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

மேலும் கூறிய நீதிபதிகள், அமைச்சரவை முடிவு எடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியமே இல்லை என கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு வழங்கினர். அதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் பேரறிவாளனை விடுவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க | ஆளுநர் தனித்து முடிவு எடுக்க அதிகாரம் இல்லை - பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Trending News