கோவை நவகரையில் நேற்று ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த ரயில் ஓட்டுனர்கள் சுபைர், அகில் ஆகிய இருவரிடம் தமிழக வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ALSO READ யானை விபத்து; லோகோ பைலட்டுகளை கைது செய்தால் போராட்டம் - எச்சரிக்கை
இன்று ரயிலின் வேகம் குறித்த அறிக்கையினை பெறுவதற்காக பாலக்காடு சென்ற தமிழக அதிகாரிகளை கேரள ரயில்வே நிர்வாகத்தினரும், ரயில்வே போலீசாரும் சிறைபிடித்துள்ளனர். தமிழன வனத்துறையில் பணியாற்றும் வனவர் அருண்சிங், அய்யப்பன், வனகாப்பாளர்கள் வனக் காப்பாளர்கள் சசி, பீட்டர் உட்பட 6 பேரை பாலக்காடு ரயில் நிலையத்தில் சிறைபிடித்துள்ளனர். கேரளாவை சேர்ந்த சுபைர் மற்றும் அகில் ஆகிய இருவரை விடுவித்தால் மட்டுமே 5 பேரை விடுவிக்க முடியும் என கேரள அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
தமிழக வனத்துறை அதிகாரிகளை கேரளா சிறை பிடித்துள்ளது கண்டித்து கோவை மலையாள சமாஜம் அமைந்துள்ள சாலையில் தந்தை திராவிட கழகம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
ALSO READ தமிழக வனத்துறை அதிகாரிகள் 6 பேர் பாலக்காட்டில் சிறைபிடிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR