Alien Temple In Salem: தமிழ்நாட்டில் கோவில்களுக்கு பெயர் பெற்றது எனலாம். ஊர் தோறும் ஒரு பெரிய கோவிலையும், தெருதோறும் ஒரு சிறிய கோவிலையும் நீங்கள் தமிழ்நாட்டில் பார்க்காமல் இருக்க முடியாது. மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அண்ணாமலையார், சிதம்பரம் நடராஜர் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், பழனி - திருச்செந்தூர் என அறுபடை வீடுகளின் கோவில்கள் என உள்ளூர் மக்கள் முதல் வெளிநாட்டினர் வழிபாடு மேற்கொள்ளவும், சுற்றுலா மேற்கொள்ளவும் இந்த பிரசித்தி பெற்ற கோவில்களில் குவியுவார்கள் எனலாம்.
தற்போது ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் தொடர் பூஜைகள், வழிபாடுகள், கொண்டாட்டங்களை உங்களால் பார்க்க முடியும். ஆன்மீக ரீதியில் மட்டுமின்றி பல்வேறு நபர்களுக்கும் தமிழ்நாட்டில் நீங்கள் கோவிலை பார்க்க முடியும். நடிகர்கள், அரசியல்வாதிகள், பெற்றோர், மனைவி என அவரவர் விருப்பத்திற்கேற்ப கடந்த காலங்களில் கோவில் கட்டி வழிபாடு செய்து வருவதை நீங்களே பார்த்திருப்பீர்கள்.
ஏலியன் சித்தர்
இந்த வரிசையில் புதிதாக இணைந்திருப்பதுதான் ஏலியன் கோவில். ஆம், வேற்று கிரகத்தில் வாழ்பவர்கள் என பேசப்படும் ஏலியனுக்கு தமிழ்நாட்டில் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. அதுவும் வேறெங்கும் இல்லை. தமிழ்நாட்டின் கொங்கு பிரதேசமான சேலம் மாவட்டத்தில்தான் ஏலியனுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் யாரால் எதற்காக கட்டப்பட்டிருக்கிறது என்ற சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.
சேலம் மாவட்டத்தில் மல்லமூப்பம்பட்டியை அடுத்த ராமகவுண்டனூரை சேர்ந்த லோகநாதன் என்பவர் தான் ஏலியனுக்கான இந்த கோவிலை கட்டியுள்ளார். ஏலியன் சித்தர், கைலாய சிவன் கோவில் என அப்பகுதியில் உள்ள பொதுமக்களால் அழைக்கப்படுகிறது. இக்கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வழிபாடு செய்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
'வேறெங்குமே இல்லை'
2021ஆம் ஆண்டு முதல் இந்த ஏலியன் கோவிலின் கட்டுமான பணியானது தொடங்கி உள்ளது. இன்னும் அதன் கட்டுமானம் முழுமையாக நிறைவடையவில்லை. கட்டுமானப் பணி நடைபெற்று வரும் போதும் ஏலியன் கோவிலில் பூஜைகள் செய்து வழிபாடு செய்து வருகிறார் லோகநாதன்.
லோகநாதனின் குருநாதர் சித்தர் பாக்யா என்று அழைக்கப்படுபவரின் ஜீவசமமாதி அருகே ஏலியன் சித்தர், அகத்திய முனிவர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. எங்குமே ஏலியன் சித்தர் இல்லை என்றும் இங்கு மட்டும்தான் ஏலியன் சித்தர் இருக்கிறது என கூறுகிறார் லோகநாதன்.
தற்போது கோவிலின் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக கூறும் லோகநாதன், குறைந்த அளவில் கோவில் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்த பிறகு, அனைத்து வகை பூஜைகளும் இங்கு நடைபெறும் என லோகநாதன் தெரிவித்தார்.
மேலும் படிக்க | அரசு கொடுத்த குட் நியூஸ் - ஜூலை மாதம் ரேஷனில் பொருள் வாங்கலையா... கவலை வேண்டாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ