Sasikala உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!

சசிகலா கொரோனாவிலிருந்து மீண்டு வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் பெங்களூர் மருத்துவமனை தெரிவித்துள்ளது..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 25, 2021, 02:47 PM IST
Sasikala உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்! title=

சசிகலா கொரோனாவிலிருந்து மீண்டு வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் பெங்களூர் மருத்துவமனை தெரிவித்துள்ளது..!

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (AIADMK) தலைவர் வி.கே.சசிகலா COVID-ல் இருந்து மீண்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் பெங்களூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (BMCRI) திங்களன்று (ஜனவரி-25) தெரிவித்துள்ளது. அவர் திட உணவுகளை இயல்பாக வாய்வழி எடுத்துக்கொள்வதாகவும், ஆதரவோடு நடப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

"சசிகலா (Sasikala) தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர் கோவிட் -19 இன் நிலையான சிகிச்சை நெறிமுறைகளின்படி சிகிச்சை பெற்று வருகிறார்" என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் சுவாசப் பிரச்சனை காரணமாக பெளரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா உயர் சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு (Victoria Hospital) நேற்று முன்தினம் பிற்பகல் மாற்றப்பட்டார். இதையடுத்து அவருக்கு உடனடியாக CT ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு நுரையீரல் தொற்று (Lung infection) இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த தொற்று மேலும் பரவாமல் இருக்கும் வகையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) தொடர்ந்து சிகிச்சை தரப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. 

ALSO READ | சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இந்நிலையில், RT-PCR சோதனை முடிவின் அடிப்படையில் சசிகலாவுக்கு கொரோனா இருப்பது நேற்றிரவு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து கொரோனா (Covid-19) வார்டுக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சைகள் வழங்கபட்டு வந்தது. தற்போது சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. 4 லிட்டர் சிலிண்டர் மூலம் அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்., ICU-வில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவை சாதாரண வார்டுக்கு (Normal ward) மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா உடல்நிலை சீராக உள்ளது, உணவு உட்கொள்கிறார். சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது. அவர் எழுந்து உட்கார்ந்து, மற்றவரின் உதவியுடன் நடக்கிறார். மேலும், அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 205 ஆக அதிகரித்துள்ளதால், இன்சுலின் (Insulin) மருந்து செலுத்தப்படுகிறது. சசிகலா சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைக்கிறார். அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்" என குறிப்பிட்டுள்ளனர்.

சொத்துகுவிப்பு வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வரும் 27ஆம் தேதி உறுதியாக விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடகா சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது. 

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News