TN Rain Update : ரெட் அலர்ட் எச்சரிக்கை - 27 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மொத்தம் 26 மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 12, 2022, 06:53 AM IST
  • காரைக்கால் மற்றும் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.
  • புதுச்சேரி மற்றும் 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
  • 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
TN Rain Update : ரெட் அலர்ட் எச்சரிக்கை - 27 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை! title=

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில்  தமிழக, புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். அடுத்த இரு தினங்களில் தமிழக - கேரள பகுதிகளை கடந்து செல்லக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, தற்போது கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாளூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களை மட்டும் சனி பகவான் அதிகம் படுத்துவார்

தொடர்ந்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணி நிலவரப்படி, மொத்தம் 26 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, திருவாரூர், திண்டுக்கல், அரியலூர், நீலகிரி, திருச்சி, தர்மபுரி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, கடலூர், பெரம்பலூர், கோயம்புத்தூர், சிவகங்கை, சேலம், தேனி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஜப்பான் நடிகை நெஞ்சுருக தமிழ் பக்தி பாடல்களை பாடி வழிபாடு !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News