வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க புதிய இணையதளம் துவக்கம்!

//nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது!!

Last Updated : Apr 30, 2020, 03:17 PM IST
வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க புதிய இணையதளம் துவக்கம்! title=

ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப http://nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது!!

உலகம் முழுவதும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பரவலை தடுக்க இந்தியாவிலும் நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், சர்வதேச விமானப்போக்குவரத்து மற்றும் உள்நாட்டு விமானப்போக்குவரத்து தடை செய்யபட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் பணி மற்றும் கல்வி, தொழில் நிமித்தமாக சென்ற தமிழர்கள் உள்பட இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.  

இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம்  கொண்டுவர தமிழக அரசு பிரத்யேக இணையதள பக்கத்தை ஏற்பாடு செய்துள்ளது. http://nonresidenttamil.org என்ற இணையதளத்தில் தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Image

பொதுமுடக்கத்தால் வெளிநாடுகளில்  சிக்கி உள்ள தமிழர்கள் எண்ணிக்கையை அறிய இந்த இணையதளம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு,  திரும்புவோரின் விபரங்கள் அறிய, அவர்களை தனிமைப்படுத்தி வசதி ஏற்படுத்த அரசு  இந்த இணையதள நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கடந்த 25 ஆம் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.  

Trending News