சென்னை: அகில இந்திய மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு (Tamil Nadu Government) கோரிய மனு குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் (Supreme Court) உத்தரவிட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான பதிலை அளிக்க உச்ச நீதிமன்றம் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.
இந்த கல்வியாண்டில் ஓபிசி இடஒதுக்கீடு ஒதுக்கீட்டை உயர்த்துவதற்காக மாநில அரசு உச்ச நீதிமன்றத்திடம் கேட்டிருந்தது.
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆளும் அதிமுக, எதிர்க்கட்சி திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் சமர்ப்பித்த மனு மீதான தீர்ப்பை தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகிய இரு உறுப்பினர்களைக் கொண்ட பெஞ்ச் வழங்கியது.
தமிழக அரசு ஓபிசி இடஒதுக்கீட்டிற்கு (OBC Reservation) ஒரு சட்டத்தைக் கொண்டுள்ளது என்றும், அது செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இது மத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்முறையாகும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டுயது.
கொரோனா காலத்தில் JEE, NEET போன்ற தேர்வுகள் எப்போது எவ்வாறு நடக்கும் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இந்தத் தேர்வுகள் மாணவர்களின் கல்லூரி சேர்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானவை என்பதால், இவற்றை நடத்த சரியான முறைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன.
ALSO READ: விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையை திறந்தது தமிழக அரசு