OBC-க்கு 50% இடஒதுக்கீடு: HC-யில் இந்திய மருத்துவ கவுன்சில் கூறிய பதில்!

மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் எழுத்துப்பூர்வ பதில்..!

Last Updated : Jul 21, 2020, 02:30 PM IST
OBC-க்கு 50% இடஒதுக்கீடு: HC-யில் இந்திய மருத்துவ கவுன்சில் கூறிய பதில்! title=

மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் எழுத்துப்பூர்வ பதில்..!

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50% இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்தள்ளது. 

மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டில் OBC-க்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் வரும் 27 ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது. இது குறித்து மனுதாரர் மற்றும் எதிர்மனுதார் எழுத்துப்பூர்வ பதில் அளிக்கலாம் என நீதிபதிகள் கூறிய நிலையில், மருத்துவச் சேர்க்கையில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான  வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

Also Read | மின்கட்டணத்தில் குளறுபடி செய்ததே அமைச்சர் தங்கமணி தான்: துரைமுருகன்!

இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்திருக்கும் பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது.... "மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்பும்போது அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகள், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதி வேண்டும் எனவும் மருத்துவக் கவுன்சிலின் எழுத்துப்பூர்வமான வாதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால், உச்ச நீதிமன்ற ஒப்புதல் இல்லாமல், மாணவர் சேர்க்கை நடைமுறையில் மாற்றம் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News