சென்னை: தொல்லியல் துறையில் (Archaeology) இரண்டு ஆண்டு முதுகலை டிப்ளோமாவுக்கான தகுதி அளவுகோலாக கன்னடம், ஒடியா மற்றும் மலையாளம் போன்ற பிற மொழிகளில் தமிழையும் சேர்க்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) நொய்டாவில் உள்ள பண்டிட் தீன்தயால் உபாத்யாய் தொல்பொருள் நிறுவனத்தில் சேர்க்கைக்கான விளம்பரத்தை வெளியிட்டது.
அந்த வழிகாட்டுதல்களில் தகுதிக்கான அளவுகோல்களில் சமஸ்கிருதம், பாலி, பிரகிருதம் மற்றும் அரபு ஆகியவை தெரிந்திருக்க வேண்டும் என்ற விவரம் இருந்தது. ஆனால், இதில் தமிழ் மொழி பற்றி (Tamil Language) குறிப்பிடப்படவில்லை.
தமிழ்நாட்டின் (Tamil Nadu) அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் மொழியியலாளர்களால் தமிழ் விலக்கு வெகுவாக நிந்திக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் பழசினாமி அவர்கள் பிரதமர் மோடிக்கு (PM Modi) டெமி-அதிகாரப்பூர்வ கடிதம் எழுதி இந்த வழிகாட்டுதல் குறித்து கவலைகளை எழுப்பிய ஒரு நாளைக்குப் பிறகு, தமிழ் மொழியை சேர்க்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை திறக்கக்கோரி குஜராத் முதல்வருக்கு EPS கடிதம்!!
சமஸ்கிருதம் 2005 ஆம் ஆண்டில் பாரம்பரிய மொழி அந்தஸ்தைப் பெற்றது. அதற்கு ஓர் ஆண்டு முன்னரே அந்த அந்தஸ்தைப் பெற்ற முதல் இந்திய மொழி தமிழ் ஆகும். தமிழுக்கு இந்த கௌரவம் 2004 ஆம் ஆண்டு கிடைத்தது.
தமிழர்களை எரிச்சலடையச் செய்த முந்தைய முடிவை மறுபரிசீலனை செய்தமைக்கும், தமிழ்மொழியை ஒரு ஒரு தகுதி அளவுகோலாக்கியதற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (K Palanisamy) பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
இதற்கிடையில், தமிழ் சேர்க்கப்பட்டதை திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினும் (MK Stalin) வரவேற்றார். ஒரு பேஸ்புக் பதிவில், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் மொழிகள்தான் கலாச்சார அடித்தளம் என்று avar கூறினார். அவற்றைக் கையாள்வதில் மாற்றான் தாய் மனப்போக்கு காட்டப்படுவதை எதிர்த்து அவர் பாஜகவை எச்சரித்தார்.
ALSO READ: இந்திய கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழக நிபுணர்கள் அவசியம்: Modi-க்கு EPS கடிதம்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR