கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அவசியம் என பல்வேறு தரப்பினும் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே போதைப்பொருள் பயன்பாடு தமிழ்நாட்டில் வராலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருக்கும் நிலையில், மதுவும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பொருளாதாரத்தை சீரழித்துக் கொண்டிருப்பதாக மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்து வருகின்றனர். மதுவால் பெண்களின் வாழ்க்கையே அதிகம் பாதிக்கப்படுவதாகவும், இளம் விதவைகள் தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றன. மேலும், சாலை விபத்துகளுக்குக்கூட பெருமளவு மதுவே காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | தொழிலாளியை கொடூரமாக தாக்கிய கோழிப்பண்ணை உரிமையாளர்... கரூரில் அதிர்ச்சி சம்பவம்..!!
இப்படியான பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும் மதுவை தமிழ்நாட்டில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற குரல்கள் ஒருபுறம் ஒலித்துக் கொண்டிருக்க, மற்றொருபுறம் கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் தமிழ்நாடு அரசு கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கள் இறக்கும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் இப்போதைய சூழலில் கள் இறக்க அனுமதி கொடுக்க வாய்ப்பில்லை என்பதில் உறுதியாக இருக்கும் தமிழ்நாடு அரசு, கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு எதிராக கடுமையான சட்டத்திருத்தத்தையும் கொண்டு வந்துள்ளது.
அதன்படி, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பனை செய்பவர்கள், அதற்கான மூலப் பொருட்களை சப்ளை செய்பவர்கள் அனைவருக்கும் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனை கொடுக்கும் வகையிலான சட்டத்திருத்தம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும், அதை கொடுக்க தவறினால் இன்னும் தண்டனை அதிகமாக்கும் வகையில் இப்புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அத்துடன் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்பதையும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் விளக்கம் கொடுத்தார். அவர் பேசும்போது, மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்தபோது சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் மதுக்கடைகளை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஒரு மதுக்கடையை மூடினால் அடுத்த கடையில் போய் மக்கள் குடிக்கிறார்கள். இதனால் மதுக்கடைகளை மூடுவதால் குடிப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகிறது. படிப்படியாக கடைகளை மூட வேண்டும் என முதலமைச்சர் கூறினார். அதை செயல்படுத்தினாலும் குடிப்பவர்கள் எண்ணிக்கை குறையவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார். இந்த விவகாரத்த்தில் உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்று விளக்கம் அளித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ