தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் (Ration Card Holders) கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு (Pongal Gift) வழங்கும் வழக்கம் உள்ளது. கடந்த ஆண்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் கரும்பு ஆகியவை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு, பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் போது, அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதனால், 1,000 ரூபாய் ரொக்கம் வழங்காமல், அரிசி, சர்க்கரை, வெல்லம், கரும்பு மட்டும் வழங்கலாம் என அரசு தரப்பில் ஆலோசனை நடந்தது.
மேலும் படிக்க | எண்ணூர் போராட்டம்... இன்னொரு ஸ்டெர்லைட் போராட்டமாக மாறிவிடக்கூடாது - சவுக்கு சங்கர்!
தமிழக அரசு முடிவு என்ன?
ஆனால், வரும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படாமல் இருக்க, கடந்த ஆண்டு போலவே, 1,000 ரூபாய் ரொக்கம் மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, ரேஷன் கார்டுதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளதால், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.2 ஆயிரமாக உயர்த்தி கொடுக்க திட்டம்?
இது தொடர்பாக, தமிழக அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதால், பரிசுத் தொகையை உயர்த்த முடியுமா என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுக்க முடியுமா என பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் விரைவில் கலந்தாலோசிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரத் தொடக்கத்தில், பரிசுத் தொகை தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. பொங்கல் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டால், பொதுமக்கள் மத்தியில் நிச்சயம் பெரும் மகிழ்ச்சி ஏற்படும்.
மேலும் படிக்க | புத்தாண்டு கொண்டாடுபவர்களுக்கு காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ